ஸ்ரீவாணி நடிக்கும் புதிய தொடர் ஆதிரா

Bookmark and Share

ஸ்ரீவாணி நடிக்கும் புதிய தொடர் ஆதிரா

ஸ்ரீவாணி, அஞ்சு அரவிந்த் நடிக்கும் புதிய தொடர் ஆதிரா. இவர்களுடன் பாலாசிங், ஐசக், தில்லா, சாருல முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

சினி டைம்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. ஆதிரா என்ற பெண்ணை சுற்றி நடக்கிற கதை. நிறைய கனவுகளோடு வாழும் ஆதிராவுக்கு ஆதரவாக வருகிறான், அர்ஜுன். அவனை அவள் காதலிக்கிறாள்.

இவர்கள் வாழ்க்கையில் இன்னொரு பெண் குறுக்கே வருகிறாள். அவள் வந்ததும் ஆதிராவின் வாழ்க்கை திசை மாறுகிறது. அவள் அமானுஷ்யங்களை நிகழ்த்தும் பெண்ணாக மாறுகிறாள். அர்ஜுன் குடும்பம் ஆதிராவுக்கு எதிராகதிரும்புகிறது.

ஆதிராவுக்கு நடந்தது என்ன? அவள் என்ன ஆகிறாள் என்பதுதான் கதை. எழுத்தாளர் பாஸ்கர் சக்தி கதை, திரைக்கதை எழுதி உள்ளார். எழில்வரதன் வசனம் எழுதுகிறார். கிரண் இசை அமைக்கிறார்.

மதுமோகன் இயக்குகிறார். முன்னணி சேனலில் நாளை தொடங்கி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions