சம்பளத்தை உயர்த்திய சிருஷ்டி டாங்கே!

Bookmark and Share

சம்பளத்தை உயர்த்திய சிருஷ்டி டாங்கே!

தமிழில் மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன் என பல படங்களில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. தற்போது வில் அம்பு, கத்துக்குட்டி, அச்சமின்றி என சில படங்களில் முக்கிய கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும், தமிழில் அதிக படங்களில் கமிட்டாகியிருக்கும் நேரத்தில் மற்ற மொழிகளில் நடிக்க கவனத்தை திருப்பினால் இங்கு நிலையான இடம் கிடைக்காமல் போய் விடும் என்பதால், தற்போதைக்கு தமிழே கதியென்று இறங்கி அடித்து வருகிறார் சிருஷ்டி டாங்கே.

மேலும், சில நடிகைகளைப்போன்று நான் சிங்கிள் ஹீரோயினாக நடித்து வரும் நேரத்தில் கேரக்டர் ரோல்களில் நடிக்க மாட்டேன் என்ற கண்டிசனெல்லாம் போடாமல், முன்னணி நடிகர்களின் படங்களில் கெஸ்ட் ரோல் என்றாலும் நடித்து அவர்களை நண்பர்களாக்கி கொள்கிறார் சிருஷ்டி.

அவரது இந்த அணுசரணையான போக்கு காரணமாகத்தான் அவர் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றபோதும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் இதுவரை சம்பள விசயத்தில் ஓரளவு அடக்கி வாசித்து வந்த சிருஷ்டி டாங்கே, தற்போது படத்துக்கு 10 லட்சம் கேட்கிறார். அதோடு, இந்த சம்பளத்துக்கு நீங்கள் ஓகே என்றால் சற்று கிளாமராகவும் நடிக்க தயார் என்று தனது மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார்.


Post your comment





Related News
ராத்திரி நேரத்துல கன்னக்குழி அழகி செய்த வேலை - ஷாக்கான ரசிகர்கள்.!
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"
பிரபல கன்னக்குழி நாயகியின் வைரலாகும் புகைப்படம் - தெறிக்கும் கமெண்ட்ஸ்.!
நான் கண்மூடித்தனமான அஜித் ரசிகை- பிரபல நடிகை
படப்பிடிப்பில் தொல்லை கொடுத்த இயக்குனர்- கண்ணீர் விடும் நடிகை
மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமை! - நடிகை சிருஷ்டி டாங்கே
முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!
நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சிருஷ்டி டாங்கே
நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சிருஷ்டி டாங்கே
தர்மதுரையில் ராதிகாவின் பெயர் ஏன் வரவில்லை – சீனு ராமசாமி விளக்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions