சிருஷ்டி டாங்கேவை முற்றுகையிடும் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள்

Bookmark and Share

சிருஷ்டி டாங்கேவை முற்றுகையிடும் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள்

மேகா படத்தில் நடித்த சிருஷ்டி டாங்கே, பின்னர் டார்லிங், எனக்குள் ஒருவன் படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்தார். அதையடுத்து, நேருக்கு நேர், கத்துக்குட்டி, புரியாத ஆனந்தம் புதிராக ஆரம்பம், அச்சமின்றி என பல படங்களில் தற்போது பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

மும்பை நடிகையான இவர், தற்போது தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு முழுநேர தமிழ் நடிகையாகி விட்டார். கைவசம் இருக்கும் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றால் முன்னணி நடிகையாகி விடும் நிலையில் இருக்கும் சிருஷ்டி டாங்கே, சில நடிகைகளைப் போன்று நடித்தால் சிங்கிள் ஹீரோயினியாக மட்டுமே நடிப்பேன் என்றும் அடம்பிடிப்பதில்லை.

அதோடு, பெரிய ஹீரோக்களுக்களின் படங்களுக்கே முதலிடம் கொடுப்பேன் என்று சொல்வதில்லை. அதனால் கோலிவுட்டில் பட்ஜெட் படம் பண்ணும் தயாரிப்பாளர்கள் சிலர் மேலும் சில படங்களுக்கு அவரை புக் பண்ண பேசிக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக, இனிமேல் நான் பட்ஜெட் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அடுத்தகட்டத்துக்கு சென்றுவிட்ட ஸ்ரீதிவ்யாவை எட்டிப்பிடிக்க முடியாத தயாரிப்பாளர்கள்தான் தற்போது சிருஷ்டி டாங்கே பக்கம் திரும்பியுள்ளனர்.

அதனால், யாரிடமும் சம்பளம் பற்றி வாய் திறக்காமல் கொடுத்ததை வாங்கிக்கொண்டு படங்களை பெருக்கும் முயற்சியில் முழுவீச்சில் இறங்கியிருக்கிறார் சிருஷ்டி டாங்கே.


Post your comment





Related News
ராத்திரி நேரத்துல கன்னக்குழி அழகி செய்த வேலை - ஷாக்கான ரசிகர்கள்.!
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"
பிரபல கன்னக்குழி நாயகியின் வைரலாகும் புகைப்படம் - தெறிக்கும் கமெண்ட்ஸ்.!
நான் கண்மூடித்தனமான அஜித் ரசிகை- பிரபல நடிகை
படப்பிடிப்பில் தொல்லை கொடுத்த இயக்குனர்- கண்ணீர் விடும் நடிகை
மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமை! - நடிகை சிருஷ்டி டாங்கே
முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!
நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சிருஷ்டி டாங்கே
நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சிருஷ்டி டாங்கே
தர்மதுரையில் ராதிகாவின் பெயர் ஏன் வரவில்லை – சீனு ராமசாமி விளக்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions