லட்சுமி மேனனால், ஸ்ருதிஹாசன் அப்செட்!

Bookmark and Share

லட்சுமி மேனனால், ஸ்ருதிஹாசன் அப்செட்!

பூஜை, புலி படங்களை அடுத்து அஜித் நடிக்கும் 56வது படத்தில் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். ஏற்கனவே அஜித் நடித்த வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, அஜித் மற்றும் அவருக்கு தங்கையாக நடிக்கும் லட்சுமிமேனனை வைத்து பின்னி மில்லில் படமாக்கினார் சிவா.

அதையடுத்து, வீரம் படத்தில் தம்பிகள் மீது பாசம் கொண்டவராக அஜித்தை காண்பித்த சிவா, இந்த புதிய படத்தில் தங்கை மீது பாசம் கொண்டவராக காண்பிக்க இருப்பதாக சிவா தரப்பில் இருந்து செய்திகள் வெளியானது.

மேலும், அஜித்-லட்சுமிமேனனுக்கிடையே செண்டிமென்ட்டான பாடல் ஒன்றும் உள்ளதாம். இந்த அளவுக்கு கதையில் அண்ணன்-தங்கை சம்பந்தப்பட்ட காட்சிகள் அழுத்தமாக இருப்பதினால்தான் நடிக்கவே சம்மதித்தாராம் லட்சுமிமேனன்.

அதோடு,  இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகி என்றாலும் அவருக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லையாம். அதாவது அஜித்தை காதல் செய்யும் சில காட்சிகளில், பாடல்களில் வந்துவிட்டு சென்று விடுவாராம். அந்த வகையில், கதையில் வரும் பிரச்னைகள் முழுக்க முழுக்க லட்சுமிமேனனை சுற்றித்தான் உள்ளதாம்.

அவருக்காக அண்ணன் அஜித் போராடுவதுதான் இந்த படமாம். அதனால், தனது அபிமானிகளிடம் இந்த படத்தில் அஜித்துக்கு அடுத்தபடியாக எல்லாமே நான்தான் என்பது போல கூறி வருகிறாராம் லட்சுமிமேனன். அவரது இந்த பேச்சினால் அவர் மீது செம கடுப்பில் இருக்கிறாராம் ஸ்ருதிஹாசன்.

 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions