மீண்டும் படம் இயக்கும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன்!

Bookmark and Share

மீண்டும் படம் இயக்கும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன்!

ஸ்ரீகாந்த்-பார்வதி நடிப்பில் சசி இயக்கிய பூ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எஸ்.எஸ்.குமரன். அதையடுத்து, விமல்-இனியா நடிப்பில் சற்குணம் இயக்கிய களவாணி படத்திற்கும் அவர் இசையமைத்தார்.

அந்த இரண்டு படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. ஆனபோதும், அதன்பிறகு அவர் இசையமைத்த விருந்தாளி, நெல்லு போன்ற படங்கள் ஓடாததால் அடுத்தபடியாக எஸ்.எஸ்.குமரனுக்கு இசையமைக்க போதிய படவாய்ப்பு இல்லை.

அதனால், தேனீர் விடுதி என்ற படத்தை தயாரித்து, இயக்கி இசையமைத்தார் அவர். அப்படமும் ஓடவில்லை. இருப்பினும். மீண்டும் உடனடியாக கேரளா நாட்டிளம் பெண்களுடனே என்றொரு படத்தையும் தயாரித்து இயக்கினார் எஸ்.எஸ்.குமரன்.

அந்த படமும் ஓடாமல் கையை சுட்டு விட்டது. அதனால் இனிமேல் படமெடுத்து கையை சுட்டுக்கொள்ள மாட்டேன் என்று மீண்டும் இசையமைப்பதற்காக படவாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார்.

ஆனால், புதிதாக அவருக்கு சில படங்கள் கிடைத்தும் அந்த படங்கள் வெளியாகாமல் கிடக்கின்றன. அதனால் மூன்றாவதாகவும் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார் எஸ்.எஸ்.குமரன்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions