ராஜமௌலி யின் பிரமாண்ட ரகசியம்!

Bookmark and Share

ராஜமௌலி யின் பிரமாண்ட ரகசியம்!

தமிழில் ஷங்கரைப் போல தெலுங்கில் பிரமாண்டத்துக்கும் தொழில்நுட்ப அசத்தல்களுக்கும் பெயர்பெற்ற இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவரது பாகுபலி நாளை வெளியாகிறது. படத்தின் பட்ஜெட் 250 கோடியைத் தாண்டிவிட்டது என்கிறார்கள்.

எப்படி ராஜமவுலியால் இப்படி பிரமாண்டமாகக் சிந்திக்க முடிகிறது பிரமாண்டமாகக் காட்சியமைக்க முடிகிறது ? இதை யாரிடம் எங்கு கற்றார் யார் அவருக்கு இன்ஸ்பிரேஷன் என்றால் அவர் தரும் பதில் பலரையும் வியப்படைய வைக்கும் "நான் பள்ளிப்படிப்பு படிக்கும் போது எனக்கு என் அப்பா, புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கினார்.

நிறைய கதைப் புத்தகங்கள் வாங்கித் தருவார். ராஜராணி கதைகள் நிறைய படிப்பேன். ஒரு கட்டத்தில் காமிக்ஸ் புத்தகங்கள் என்னைக் கவர்ந்தன.அவற்றின் மீது தீராத காதலுடன் அலைந்தேன்.

 

அந்த உலகம் எனக்கு புதுவித அனுபவமாக இருந்தது. அப்படி நான் படித்த இரும்புக்கை மாயாவி, சூப்பர் மேன். ஜேம்ஸ் பாண்ட் போன்ற காமிக்ஸ்கதைகள் எனக்கு படம் பார்க்கும் அனுபவத்தைத் தந்தன.

அதில் உள்ள படங்கள் எனக்கு வெறும் ஓவியமாகத் தெரியாது. சினிமா பார்ப்பது போல உணர்வேன். என் கனவில்கூட ராஜாராணி கதைகள்விரியும். காமிக்ஸ் நாயகர்கள் வலம் வருவார்கள் அப்படி என் ஆழ்மனதில் தங்கிவிட்ட ராஜாராணிகளும் காமிக்ஸ் கதாநாயகர்களும் காட்சிகளுமே என் படங்களில் வருகின்றன. என் பிரமாண்ட ரகசியம் நான் படித்த இதுமாதிரியான புத்தகங்கள்தான் என்பேன்.

படங்களில் இன்னும் பிரமாண்டமாகச் சொல்லவேண்டியவை காட்ட வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. . என்கிறார்.


Post your comment





Related News
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions