1000 கோடிக்கு ஆசைப்படும் ராஜமௌலி!

Bookmark and Share

1000 கோடிக்கு ஆசைப்படும் ராஜமௌலி!

இந்த வருடத்தில் பிரம்மாண்ட படமாக வெளியாகி இந்தியா முழுக்க 500 கோடிகளை வசூலித்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தற்போது மொத்த இந்தியாவும் காத்திருக்கிறது.

பாகுபலி ஏன் கொல்லப்பட்டார்?, ரம்யா கிருஷ்ணன் செய்த பாவம் என்ன?, அனுஷ்காவுக்கு பிற்பாதியில் என்ன நேர்ந்தது? என பல கேள்விகளுக்கு பாகுபலி இரண்டில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக ஸ்ரேயா சரண் பாகுபலியில் ராணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் என புது தகவல் கிடைத்துள்ளது.

மொத்தம் 9 மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ள இப்படம் தற்போது ப்ரீபுரடக்‌ஷன் வேலைகளில் உள்ளன, மேலும் இரண்டு புது நடிகர்கள் இந்த பாகம் இரண்டில் இணையலாம் என சொல்லப்பட்டு வரும் நிலையில் ராஜமௌலி பாகுபலி 2ம் பாகத்தை 1000 கோடி வசூலிக்க வைக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம்.

இதற்குக் காரணம் இந்தியாவின் அனைத்து டிவி சேனல்களிலும் பாகுபலி முதல் பாகம் ஒளிபரப்பாகிவிட்டது. கண்டிப்பாக பாகுபலி முதல் பாகத்தை திரையரங்கில் பார்க்காதவர்கள், இரண்டாம் பாகத்தை ஆர்வமாகப் பார்ப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பில்  ராஜமௌலி இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.


Post your comment





Related News
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions