எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பத்து சூப்பர் ஹிட் படங்கள்!

Bookmark and Share

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பத்து சூப்பர் ஹிட் படங்கள்!

தெலுங்கில் 2001-ல் வெளியான ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தை முதன்முதலாக இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இப்படம் பின்னர் அதே பெயரில் சிபிராஜ் நடிப்பில் தமிழில் ரீமேக் ஆனது.

அதன்பிறகு சிம்ஹாட்ரி என்ற படத்தை இயக்கினார். அப்படம் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் கஜேந்திரா என்ற பெயரில் ரீமேக் ஆனது. பின்னர் சத்ரபதி படத்தையடுத்து விக்ரமார்குடு என்ற படத்தை இயக்கினார். இப்படம் சிறுத்தை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

அந்த படங்களைத் தொடர்ந்து மகதீராவை இயக்கினார். அப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப்பானது. அடுத்து மரியாத ராமண்ணாவை இயக்கினார். அப்படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று தமிழில் ரீமேக் ஆனது.

அடுத்து அவர் இயக்கிய ஈகா என்ற படம் தமிழில் நான்ஈ என்ற பெயரிலும் வெளியானது. அதையடுத்து இப்போது 200 கோடி பட்ஜெட்டில் பாகுபலி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கியுள்ளார்.

இப்படி கடந்த 14 ஆண்டுகளில் ராஜமவுலி இயக்கிய 11 படங்களில் 10 படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் வரிசையாக 10 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர்களில் ராஜமவுலி முதலிடத்தை பிடித்திருக்கிறாராம்.


Post your comment





Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
மிஷ்கினிடம் ஒரு கோடி ரூபாயை ஏமாந்தேன் - இளம் நடிகர் மைத்ரோயா புகார்
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதை உறுதிப்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ்
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
நடிகை ரியாமிகா தூக்குப்போட்டு தற்கொலை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions