ராஜமௌலியின் தந்தை இயக்கத்தில் ஸ்ரீதேவியின் மகள்

Bookmark and Share

ராஜமௌலியின் தந்தை இயக்கத்தில் ஸ்ரீதேவியின் மகள்

கோலிவுட்டில் இருந்து சென்று பாலிவுட்டில் செட்டிலான நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி, தாயுடன் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளுக்கு வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அவரைத் தேடி பட வாய்ப்புகள் வருகின்றபோதிலும் அவர் இதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத், துல்கர் சல்மானை வைத்து படம் ஒன்றை எடுக்கிறாராம்.

அந்த படத்தில் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க ஜான்வியை அணுகியுள்ளாராம். ஜான்விக்கும் கதை பிடித்துவிட்டது என்று கூறப்படுகிறது. இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் எடுக்கப்பட உள்ளது.

இந்த படம் மூலம் துல்கர் சல்மான் பாலிவுட் செல்கிறார். ஓ காதல் கண்மணி படம் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்த துல்கர் தற்போது தமிழில் ஒரு படத்திலும், மலையாளத்தில் 2 படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
மிஷ்கினிடம் ஒரு கோடி ரூபாயை ஏமாந்தேன் - இளம் நடிகர் மைத்ரோயா புகார்
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதை உறுதிப்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ்
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
நடிகை ரியாமிகா தூக்குப்போட்டு தற்கொலை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions