ஜெஸ்ஸியை பார்க்க ராஜமௌலியை அறைக்குள் அடைத்த மகன்

Bookmark and Share

ஜெஸ்ஸியை பார்க்க ராஜமௌலியை அறைக்குள் அடைத்த மகன்

ராஜமௌலி தெலுங்குத் திரைப்பட இயக்குனராக இருந்து பாகுபலி திரைப்படம் மூலம் இந்தியத் திரைப்பட இயக்குனராக உயர்ந்துள்ளவர். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேசவே படத்தை ராஜமௌலியைப் பார்க்குமாறு அவருடைய மகன் பல முறை சொல்லியிருக்கிறார்.
ஆனால், அப்படிப்பட்ட காதல் படங்களைப் பார்ப்பது ராஜமௌலிக்கு அதிகம் பிடிக்காத்தால் அந்தப் படத்தைப் பார்க்க ராஜமௌலி தவிர்த்திருக்கிறார். இந்நிலையில் ஒரு நாள் ராஜமௌலியை ஒரு அறைக்குள் பூட்டி வைத்து விட்டு, அந்தப் படத்தை அவருடைய மகன் பார்க்க வைத்திருக்கிறார்.  
பிறகுதான் ஜெஸ்ஸி கதாபாத்திரத்தையும், அதன் வடிமைப்பையும் தான் ரசித்ததாகவும், அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்றும் ராஜமௌலி சொல்லியிருக்கிறார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் இயக்குனர் கௌதம் மேனனும் மேடையில் இருக்க இப்படிப்பட்ட ஒரு பாராட்டை ராஜமௌலி தெரிவித்திருக்கிறார்.
படத்தில் ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் நடித்த சமந்தாதான் பின்னர் ராஜமௌலி இயக்கிய நான் ஈ படத்தில் நாயகியாக நடித்தார். அந்த அளவிற்கு அவரை ஜெஸ்ஸி கதாபாத்திரமும், அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த சமந்தாவும் கவர்ந்திருக்கிறார்கள்.
ராஜமெலியின் பாராட்டைக் கேட்ட கௌதம் மேனன் , “உங்கள் மகன் வாழ்க்கையில் ஜெஸ்ஸி இருந்திருக்கிறார், ஆனால் உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு ஜெஸ்ஸியும் வரவில்லை போலிருக்கிறது. இந்த உலகத்தில் பல ஜெஸ்ஸிக்கள் இருக்கிறார்கள்,” என பலத்த கைத்தட்டலுக்கிடையே சொல்லியது சுவாரசியமானது. 


Post your comment





Related News
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions