செல்போனுக்கு தடை போட்ட ராஜமௌலி!

Bookmark and Share

செல்போனுக்கு தடை போட்ட ராஜமௌலி!

இந்திய சினிமாவின் அதிக வசூல் படைத்த படம் என்றால் அதில் முதல் இடத்தில் இருப்பது ராஜமௌலியின் பாகுபலி படம்தான். இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ஒட்டுமொத்த இந்தியா சினிமா பிரியர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது பாகுபலி 2 பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாகுபலி பெற்ற வெற்றியைவிட இரண்டாம் பாகம் இன்னும் அருமையாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார் ராஜமௌலி.

இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை எகிற வைப்பதற்காக படப்பிடிப்பில் யாரும் செல்போன் உபயோகிக்க கூடாது என்று கூறிவிட்டாராம். அதுமட்டுமின்றி சில பவுன்சர்களையும் வேலைக்கு வைத்து கண்காணிக்க சொல்லியிருக்கிறார்.

கோடிகளை வசூலாக குவிக்கும் இயக்குநர் சொன்னா கேட்டுத்தானே ஆகனும், படத்தின் நாயகன் பிரபாஸ், அனுஷ்கா, ராணா ஆகியோரும் ராஜமௌலிக்கு சரிங்க சாமி என்று கூறிவிட்டார்களாம். அதிகார்ப்பூர்வ அறிவிப்பாக மட்டுமே செய்திகள் வெளியாக வேண்டும், அதற்காகத்தான் இந்த கிடுக்குப்பிடி என்கிறார் ராஜமௌலி.

பாகுபலி 2ம் பாகம் 2016 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவித்தார்கள், ஆனால் கிராஃபிக்ஸ் வேலைகளே பல மாதங்கள் இழுப்பதால் 2017 சம்மரில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 


Post your comment





Related News
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions