தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ராஜமௌலி

Bookmark and Share

தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ராஜமௌலி

'நான் ஈ' படத்தின் வெற்றி இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி கடந்த இரண்டு வருடங்களாக பிரம்மாண்டமாக இயக்கி வரும் படம் 'பாகுபலி'. தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இப்படம் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது.

முதலில் மே மாதம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படத்தை ஜுலை மாதம்தான் வெளியிட உள்ளனர். படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள், எஃபெக்ட்ஸ் காட்சிகள் ஆகியவற்றின் பணிகள் இன்னும் முடியாததே கொஞ்சம் தாமதமான வெளியீட்டிற்கான காரணம் என ராஜமௌலி கடந்த வாரம் அறிவித்தார்.

அதோடு அவர் அறிவித்தபடி படத்தின் போஸ்டர்களை கடந்த சில நாட்களாக ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டு வருகிறார்கள். மே 1ம் தேதி இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. சற்று முன்னர் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

நடிகர் பிரபாஸ் ஒரு சிவலிங்கத்தைத் தூக்கிக் கொண்டு நடப்பது போன்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராஜமௌலி கூடவே, “கங்கையை ஏந்திடும் சிவனைதோளினில் ஏந்திடும் இவனையார் எனப் பார்த்திடும் ஞாலம் ஒரு கணம் நின்றிடும் காலம்”என்ற பாடலையும் சேர்த்து தமிழில் டிவீட் செய்துள்ளார்.

'நான் ஈ' படம் தமிழில் பெரும் வெற்றி பெற்றது போலவே 'பாகுபலி' படத்தையும் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என ராஜமௌலி அவருடைய படம் பற்றிய பதிவுகளில் தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions