ராஜமௌலியைப் பாராட்டாத தெலுங்கு இயக்குனர்கள்

Bookmark and Share

ராஜமௌலியைப் பாராட்டாத தெலுங்கு இயக்குனர்கள்

தன்னை விட ஒருவன் முன்னேறிக் கொண்டு போகிறான் என்றால் அவனைக் கண்டு பெருமைப்படாமல், பொறாமைப்படுபவர்களே இந்த உலகத்தில் அதிகம்.

அடுத்தவர்களைப் பாராட்டும் குணம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த விஷயம் தற்போது  பாகுபலி  படத்திற்கும் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.

ஒரு புதிய சாதனையை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கும்  பாகுபலி  படத்தை இயக்கிய ராஜமௌலியை தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த மற்ற முன்னணி இயக்குனர்கள் இதுவரை மனம் திறந்து பாராட்டவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

தமிழில் முன்னணி இயக்குனராக விளங்கும் ஷங்கர், மற்றும் ஹிந்தியில் முன்னணி இயக்குனர்களாக உள்ள பலரும் ராஜமௌலியைப் பாராட்டி வருகிறார்கள்.

ஆனால், தெலுங்கில் முக்கிய இயக்குனர்களாகக் கருதப்படும் த்ரிவிக்ரம், பூரி ஜெகன்னாத், சீனு வைட்லா, விநாயக் உள்ளிட்ட யாரும் இதுவரை  பாகுபலி  படத்தைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை.

ராம் கோபால் வர்மா மட்டுமே டிவீட் செய்திருந்தார். தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் படத்தைப் பற்றி பாராட்டியுள்ள நிலையில் மற்ற முன்னணி இயக்குனர்கள் ராஜமௌலியைப் பாராட்டாமல் இருப்பது அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் பொறாமையைக் காட்டுவதாக உள்ளது என தெலுங்கு மீடியாக்கள் குற்றம் சாட்டுகின்றன.

 


Post your comment





Related News
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions