ராஜமவுலிக்காக தமன்னா செய்ததை சுந்தர் சி.க்காக செய்யும் ஸ்ருதி

Bookmark and Share

ராஜமவுலிக்காக தமன்னா செய்ததை சுந்தர் சி.க்காக செய்யும் ஸ்ருதி

சங்கமித்ரா படத்திற்காக ஸ்ருதி ஹாஸன் லண்டனில் வாள் சண்டை கற்றுக் கொண்டிருக்கிறார். 

பரபரப்பாக நடித்து வந்த ஸ்ருதியின் கையில் தற்போது புதிய படங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் தான் அவர் சுந்தர் சி.யின் மெகா பட்ஜெட் படமான சங்கமித்ராவில் இளவரசியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 
படத்தில் அவர் வாள் சண்டை போடும் காட்சிகள் உள்ளன.

சண்டை காட்சிகள் குறித்து அறிந்த ஸ்ருதி சூட்கேஸை எடுத்துக் கொண்டு லண்டனுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வாள் சண்டை கற்று வருகிறார்.

புதிய கலையை கற்றுக் கொள்ள கிடைத்த வாய்ப்பை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். வாள் சண்டை கற்பது புதிய அனுபவமாக உள்ளது. மன ரீதியாக மகிழ்ச்சியாகவும், த்ரில்லாகவும் உள்ளது என ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

சங்கமித்ரா படத்தில் ஸ்ருதி ஹாஸன் இளவரசி சங்கமித்ராவாக நடிக்கிறார். இந்த படத்தில் ஆர்யா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் உள்ளனர். படத்தின் பட்ஜெட் ரூ. 150 கோடி ஆகும்.

சங்கமித்ரா படத்தில் நடிக்க சுந்தர் சி. முதலில் விஜய், சூர்யா ஆகியோரை கேட்க அவர்களோ மெகா பட்ஜெட் படம் வம்பு எதற்கு என்று ஒதுங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
யார் செய்த வேலை இது? தளபதி-62 படத்தால் உச்ச கட்ட கோபத்தில் தளபதி ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி
தளபதி-62 படத்தில் விஜயின் மகள் திவ்யா, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - சர்ப்ரைஸ் தகவல்.!
பிக்பாஸ் பரணிக்கு அடித்த யோகம்
பிக் பாஸ்-2 எப்போது தொடங்கும்? தொகுப்பாளர் யார்? - வெளியான சூப்பர் தகவல்கள்.!
பிப்ரவரி-2ல் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா? - உங்க சாய்ஸ் எது?
அந்தரத்தில் மிதந்த பிக் பாஸ் பிரபலம், அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தளபதி-62 படம் பற்றி வெளியான சூப்பர் தகவல் - பக்கா பிளானில் முருகதாஸ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions