கபாலி, தெறி, தங்கல், சுல்தான் என அனைத்து சாதனைகளும் முறியடிப்பு- உலக அளவில் சாதனை பாகுபலி-2

Bookmark and Share

கபாலி, தெறி, தங்கல், சுல்தான் என அனைத்து சாதனைகளும் முறியடிப்பு- உலக அளவில் சாதனை பாகுபலி-2

இந்திய சினிமாவின் மைல் கல்லாக அமைந்த படம் பாகுபலி. இப்படத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கின்றது.

இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவர, சமூக வலைத்தளமே ஸ்தம்பித்தது, இந்த ட்ரைலர்(தெலுங்கு) 24 மணி நேரத்தில் 2 கோடிக்கு மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துள்ளது.

மேலும் 5 லட்சம் லைக்ஸுகளை பெற்று உலக சாதனை செய்துள்ளது, இதன் மூலம் கபாலி, தெறி, தங்கல், சுல்தான் என அனைத்து பட சாதனைகளையும் பாகுபலி-2 முறியடித்துள்ளது.

இது மட்டுமின்றி குறைந்த நேரத்தில் அதிக பார்வையாளர்கள் என்ற சாதனையையும் பாகுபலி-2 தன் வசப்படுத்தியுள்ளது.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions