மீண்டும் ராஜமவுலி உடன் இணையும் பிரபாஸ்

Bookmark and Share

மீண்டும் ராஜமவுலி உடன் இணையும் பிரபாஸ்

‘பாகுபலி 2’ வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் இந்தியா முழுவதும் தெரிந்த ஹீரோ ஆகி இருக்கிறார். தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவருக்கு இந்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது.

இப்போது பிரபாஸ் ‘சாஹோ’ என்ற படத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.இதிலும் பிரபாஸ் ஜோடி அனுஷ்கா என்று கூறப்படுகிறது.இந்தி, தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்த படத்தை சுஜீத் இயக்குகிறார்.

ரூ.150 கோடி செலவில் உருவாகும் இதை வம்சி கிருஷ்ண ரெட்டி தயாரிக்கிறார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் பிரபாஸ் இருந்து திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.

இது தவிர ‘பாகுபலி-2’ படத்தின் இந்தி பதிப்பை வெளியிட்ட இயக்குனர் கரண் ஜோஹர், பிரபாசை நேரடி இந்தி படத்தில் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க வைக்க விரும்பினார். அதை பிரபாசிடமே சொன்னார்.

இது வரை பதில் சொல்லாமல் இருந்த பிரபாஸ், இப்போது அதை ஏற்க முடிவு செய்துள்ளார். இது பற்றி கூறிய அவர், “இந்தி பட உலகில் உடனே கால் வைக்கும் திட்டமில்லை.ஆனால் இது இன்ட்ரஸ்டிங் ஆக உள்ளது ராஜமவுலியுடன் இத்தனை ஆண்டுகள் வேலை செய்துள்ளேன்.

மீண்டும் அவருடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் வசதியானது” என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
குத்தாட்டம் போட சென்னை வருகிறார் சன்னிலியோன்
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம்
`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து
கவர்ச்சி படத்தை வெளியிட்ட வித்யுலேகா
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
மெர்சலை பின்னுக்கு தள்ளிய தீரன், வசூல் சாதனை
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions