நில மோசடி விவகாரம்: முதல்வர் தனிப்பிரிவில் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகள் புகார்

Bookmark and Share

நில மோசடி விவகாரம்: முதல்வர் தனிப்பிரிவில் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகள் புகார்

நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகள் லட்சுமி. இவர் சென்னை கோட்டையில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் நில மோசடி புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:–

கூடுவாஞ்சேரியில் எனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் ஆர்.ஆர்.பி. ஹவுசிங் பத்மநாபன் என்பவர் என்னை ஏமாற்றி அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தவேண்டும் என சி.எம்.டி.ஏ.வில் புகார் அளித்து தடை ஆணையும் பெற்றுள்ளேன்.

மேலும் பத்மநாபன் மீது சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பத்மநாபனை கைது செய்ய வேண்டும்.

அவருக்கு உடந்தையாக இருக்கும் திருப்போரூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவி மற்றும் திருப்போரூர் சார் பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions