20 கோடி பார்வையாளர்களைக் கடந்து யூ-டியூபைக் கலக்கி வரும் ஸ்டார் வார்ஸ் தி போர்ஸ் அவேகன்ஸ்

Bookmark and Share

20 கோடி பார்வையாளர்களைக் கடந்து யூ-டியூபைக் கலக்கி வரும் ஸ்டார் வார்ஸ் தி போர்ஸ் அவேகன்ஸ்

1980-களில் ஹாலிவுட்டையே புரட்டிப் போட்ட திரைப்படம் ஸ்டார் வார்ஸ். தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களைப் பெற்றுள்ள ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் 6 பாகங்கள் இது வரை வெளியாகியுள்ளன.

தற்போது 'ஸ்டார் வார்ஸ் தி போர்ஸ் அவேகன்ஸ்' என்ற பெயரில் 7-வது பாகம் தயாராகி வருகிறது. ஜே.ஜே. ஆப்ராம்ஸ் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. வேற்று கிரகம் என்ற ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பாகத்திலும் ஸ்டார் வார்ஸ் போகும் உயரம் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது.

’அவெஞ்சர்ஸ்’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சண்டைகள் ஓய்ந்த நிலையில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி தனது ’ஸ்டார் வார்ஸ்’ படத்தின் மீது ஆல் கேமராவையும் போகஸ் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்டார் வார்ஸ் படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக உள்ளது.

இது குறித்து டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாப் இகர் கூறுகையில் “ஸ்டார் வார்ஸ் தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் படத்தின் 2-வது டீசரை இதுவரை 200 மில்லியன் பேர் (20 கோடி) பார்த்தனர். சமீபத்தில் வெளியாகியுள்ள படத்தின் டிரெய்லரை வெளியான 24 மணி நேரத்திற்குள் 88 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். ரசிகர்களின் அமோகமான ஆதரவுக்கு நன்றி” என்றார்.


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions