ஹாலிவுட் நடிகர் ஸ்டீவன் செகலுக்கு ரஷிய குடியுரிமை: அதிபர் புதின் வழங்கினார்

Bookmark and Share

ஹாலிவுட் நடிகர் ஸ்டீவன் செகலுக்கு ரஷிய குடியுரிமை: அதிபர் புதின் வழங்கினார்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஸ்டீவன் செகல்(64). இவர் தயாரிப்பாளர், கதாசிரியர் மற்றும் , ஸ்டண்ட் பயிற்சியாளர் என பன்முக திறமை கொண்டவர்.இவருக்கு ரஷியா மீது எப்போதும் தனிப்பட்ட பாசமும் பிரியமும் உண்டு. அந்நாட்டின் கலை மற்றும் கலாசாரத்தின் மீது மிகுந்த பற்றும் பாசமும் வைத்துள்ளார். எனவே அடிக்கடி ரஷியாவில் சுற்றப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ரஷிய அரசியல்வாதிகளின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார். அதே நேரத்தில் அமெரிக்க அரசையும் விமர்சித்து வந்தார் இந்த நிலையில் தனக்கு ரஷிய குடியுரிமை வழங்கும்படி விண்ணப்பித்து இருந்தார்.

அதை பரிசீலித்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அவருக்கு ரஷிய குடியுரிமை வழங்கி உத்தரவிட்டார். இத்தகவலை புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

“செகல் எப்போதும் எங்கள் நாட்டின் மீது நல்ல மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார். அதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. அவர் அனைவரும் அறிந்த நடிகர். ஆகவே அவருக்கு ரஷிய குடியுரிமையை பெற்று தந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

குடியுரிமை கிடைத்ததை தொடர்ந்து ஸ்டீபன் செகல் அமெரிக்காவில் இருந்து வெளியேறி ரஷியாவில் குடியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிரெஞ்ச் நடிகர் ஜெராட் டிபார் டியூ, அமெரிக்க குத்து சண்டை வீரர் ராய் ஜோன்ஸ். ஆகியோருக்கு ரஷிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions