இம்மாதம் சிம்புவின் இது நம்ம ஆளு வெளியாகுமா?

Bookmark and Share

இம்மாதம் சிம்புவின் இது நம்ம ஆளு வெளியாகுமா?

சிம்பு நயன்தாரா நடிப்பில் தயாராகியிருக்கும் இதுநம்மஆளு படத்தின் பாடல்கள் பிப்ரவரி 3ஆம் நாள் வெளியானது.

படத்தை பிப்ரவரி 14 காதலர்தினத்தன்று வெளியிட முதலில் திட்டமிட்டதாகச் சொல்லப்பட்டது. அதன்பின் படத்தை மார்ச் 25 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள்.

இந்தத் தேதியை விட்டுவிட்டால் ஏப்ரலில் விஜய், சூர்யா ஆகியோர் படங்கள் உட்பட பெரியபடங்கள் வரவிருக்கின்றன என்பதால் அந்நேரத்தில் இப்படத்தை வெளியிட்டால் அதிக திரையரங்குகள் பிடித்து பெரிய வசூல் எடுக்கமுடியாது என்கிற நிலை இருப்பதாகச் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது திட்டமிட்டபடி 25 ஆம் தேதி படம் வெளியாவது சந்தேகமே என்கிறார்கள். ஏனெனில் படத்தில் இன்னும் இரண்டுபாடல்களைப் படமாக்கவேண்டியிருக்கிறதாம்.

நயன்தாரா வரவேமுடியாது என்று சொல்லிவிட்டதால் வேறொரு முன்னணி நடிகையை வைத்து அப்பாடலைப் படமாக்க முயற் சிசெய்துகொண்டிருந்தார்கள்.

ஆனால் அது சம்பந்தப்பட்ட வேலைகள் எதுவும் நடக்கவில்லையாம். அதற்குக்காரணம், படத்தை முதல்பிரதி அடிப்படையில் தயாரித்துக்கொண்டிருக்கும் இயக்குநர் பாண்டிராஜூக்கும் தயாரிப்பாளர் டி.ராஜேந்தருக்கும் இடையிலான வரவுசெலவுக்கணக்கில் உடன்பாடு ஏற்படவில்லையென்றும் சொல்லப்படுகிறது.

இதனால் படம் சம்பந்தப்பட்ட வேலைகள் தாமதமாகிறதென்று சொல்கிறார்கள். அதேசமயம் இருக்கும் சிக்கல்களைச் சரிசெய்யும் முயற்சிகளும் வேகமாக நடந்துகொண்டிருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும் மார்ச் 25 ஆம் தேதி படம் வெளியாவது சந்தேகம்தான் என்று சொல்கிறார்கள்.  


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions