கேள்வி கேட்பவர்கள் கட்டடத்தை இடிக்கும் போது எங்கே போனார்கள் – சிம்பு ஆவேசம்

Bookmark and Share

கேள்வி கேட்பவர்கள் கட்டடத்தை இடிக்கும் போது எங்கே போனார்கள் – சிம்பு ஆவேசம்

நடிகர் சங்கம் தேர்தல் வரும் 18ம் தேதி நடக்க உள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் களத்தை விட நடிகர் சங்கத்தின் தேர்தல் சூடு பறக்கிறது. சரத்குமார் தலைமையிலான அணியினரும், விஷால் தலைமையிலான அணியினரும் ஆதரவு கேட்டு வருவதை விட, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை கொள்கையாக கொண்டு செயல்படுகின்றனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் சிம்பு கூறியதாவது:

நடிகர் சங்க பிரச்னையில், இன்று கேள்வி கேட்பவர்கள் கட்டடத்தை இடிக்கும் போது எங்கே போனார்கள். எஸ்பி.ஐ, சினிமாஸ் உடனான ஒப்பந்தத்தில் என்ன தவறு இருக்கிறது.

அங்கு ஏன் திரையரங்கு வேண்டாம் என்று சொல்கிறார்கள், பிறகு வேறு என்ன தான் அங்கு வர வேண்டுமாம். எதிரணியினர் என்னை விரோதியாக பார்க்கிறார்கள். பூச்சி முருகன் தொடர்ந்த வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை.

கட்டடம் தொடர்பான ஒப்பந்தம் சரியானது தான். நான் யாரைப் பற்றியும் தவறாக பேச மாட்டேன். நான் எனது குடும்பத்திற்காக இங்கு பேச வந்துள்ளேன். இன்றைக்கு யாரோ வந்து என் சினிமா குடும்பத்தை உடைக்க நினைக்கிறார்கள். என் குடும்பத்தில் பிரிவினை உண்டாக்க நீ யார்?

நடிகர் சங்கம் பக்கம் வராதவர்கள் எல்லாம் இன்று கேள்வி கேட்கிறார்கள். உன் படத்தை எந்த திரையரங்கில் ரிலிஸ் செய்வாய், ஒன்றாக இருந்த எங்கள் குடும்பத்தை, உன் பதவி ஆசைக்காக பிரித்து, தற்போது நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விட்டாய். ராதாரவி அண்ணன் உன்னை நாய் என்று கூறியது தவறு தான், அவர் உன்னை நரி என்று கூறியிருக்க வேண்டும், நீ கிரிக்கெட் அணிக்கு மட்டும் தான் கேப்டன், அதை புரிந்துக்கொள்’ என்று விலாசி விட்டார்.

வருகிற 11ம் தேதி எங்களது அணியின் பலத்தை நாங்கள் நிரூபிப்போம். எல்லோரும் ஒன்று திரண்டு வாருங்கள். சங்க ஒற்றுமைக்காக தேர்தலில் இருந்து எங்கள் அணியினர் வாபஸ் பெற தயாராக இருக்கிறோம் என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

இதில் ராதிகா பேசியதாவது:

நடிகர் சங்க கட்டட விவகாரத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. தேவையில்லாமல் விஷால் அணியினர் குற்றம் சுமத்துகின்றனர். நடிகர் சங்க கட்டடத்தை இடிக்கும்போது ஏன் நீங்கள் (விஷால் அணியினர்) வரவில்லை.

விஷால்-கார்த்தி அணியினருக்கு பின்னால் யாரோ ஒருவர் இருக்கிறார். அவர் தான் இவர்களை தூண்டிவிடுகிறார். நடிகர் சங்க பிரச்னையில் என்ன நடக்கிறது என்று பேச ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் ஏன் முன்வரவில்லை.

கமலை கேட்டால் சர்ச்சைக்குள் வர விரும்பவில்லை என்று கூறுகிறார். நடிகர்களாகிய நாம் எல்லாம் ஒரு குடும்பம். நடிகர் சங்கத்தை கலைக்க வேண்டாம் என்று விஷாலை கேட்டு கொள்கிறேன் என்றார்.


Post your comment

Related News
சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
மீண்டும் வருவேன்; நம்புங்கள்! - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ
இணையதளத்தில் சிம்புவின் புதிய படம்: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்
அச்சம் என்பது மடமையடா மற்றொரு சிங்கிள் டிராக் விரைவில் வெளியீடு!
இம்மாதம் சிம்புவின் இது நம்ம ஆளு வெளியாகுமா?
இது நம்ம ஆளு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு பிறந்த நாளில் வெளியாகும் ‘இது நம்ம ஆளு’ பட ஆடியோ!
சிம்பு படம் 60 கோடி பிசினஸ்! ஆச்சரியத்தில் திரையுலகம்
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் புக்கான சிம்புவின் நாயகி!
பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சிம்பு சம்மதம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions