என்னை வீழ்த்த நினைத்தவர்களுக்கு ஆண்டவன் பதில் சொல்வான்: சிம்பு உருக்கம்

Bookmark and Share

என்னை வீழ்த்த நினைத்தவர்களுக்கு ஆண்டவன் பதில் சொல்வான்: சிம்பு உருக்கம்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வாலு’ படம் பல்வேறு சிக்கலுக்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படம் பல்வேறு தடைகளையும் தாண்டி வெளிவருவது சிம்பு மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை வரவழைத்துள்ளது. இப்படம் வெளிவருவதற்கான முயற்சிகளில் தற்போது படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். 

இந்நிலையில், சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சில பேர் என் படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடுத்து, என்னை கீழே தள்ளிவிட பார்த்தார்கள். ஆனால், மக்கள் என்மீதுள்ள வைத்துள்ள அன்பை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தடுக்க நினைத்தவர்களுக்கு ஆண்டவன் விரைவில் பதில் சொல்வான் என்று தெரிவித்துள்ளார். 

‘வாலு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. 

இப்படம் வெளியாகும் ஆகஸ்ட் 14-ந் தேதி ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்ற படமும் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
மீண்டும் வருவேன்; நம்புங்கள்! - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ
இணையதளத்தில் சிம்புவின் புதிய படம்: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்
அச்சம் என்பது மடமையடா மற்றொரு சிங்கிள் டிராக் விரைவில் வெளியீடு!
இம்மாதம் சிம்புவின் இது நம்ம ஆளு வெளியாகுமா?
இது நம்ம ஆளு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு பிறந்த நாளில் வெளியாகும் ‘இது நம்ம ஆளு’ பட ஆடியோ!
சிம்பு படம் 60 கோடி பிசினஸ்! ஆச்சரியத்தில் திரையுலகம்
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் புக்கான சிம்புவின் நாயகி!
பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சிம்பு சம்மதம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions