சிம்பு மீது உள்ள வழக்கின் விசாரணைக்கு தடைவிதிக்க ஐகோர்ட்டு மறுப்பு

Bookmark and Share

 சிம்பு மீது உள்ள வழக்கின் விசாரணைக்கு தடைவிதிக்க ஐகோர்ட்டு மறுப்பு

நடிகர் சிம்பு பாடிய ஆபாச ‘பீப்’ பாடல் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து சிம்பு மீது பல போலீஸ் நிலையங்களில், பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பால் முகவர்கள் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகர் சிம்பு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர் சிம்பு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘ஒரே குற்றச்சாட்டுக்காக பல கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய முடியாது என்று ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

ஆபாச பாடல் பாடி, வெளியிட்டதாக என் மீது கோவை மாவட்டம் போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதே குற்றச்சாட்டுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்தது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும். இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. சிம்பு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சிம்புக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யவேண்டும். வழக்கின் புலன் விசாரணையை மேற்கொள்ள போலீசாருக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும்’ என்று வாதிட்டார். 

அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் சண்முகவேலாயுதம், ‘போலீஸ் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கக்கூடாது’ என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, போலீசாரின் புலன் விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டார். சிம்பு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நோட்டீசு அனுப்பவும், விசாரணையை 22-ந்தேதிக்கு தள்ளிவைத்தும் உத்தரவிட்டார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions