தப்பு நடந்தால் முதல் ஆளாக குறல் கொடுப்பேன்- சிம்பு

Bookmark and Share

தப்பு நடந்தால் முதல் ஆளாக குறல் கொடுப்பேன்- சிம்பு

வருகிற நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியில் உப தலைவர் பதவிக்கு சிம்பு போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்று சரத்குமார் தேர்தல் குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது கலந்துக்கொண்ட சிம்பு பேசும்போது, 

“நான் நடிகன், டி.ராஜேந்தரின் மகன், தமிழன் இதையெல்லாம் தாண்டி ஒரு மனிதன் என்பதை ஆன்மீக ரீதியாக உணர்ந்த ஆள் நான். எனக்கு பிரிவினை என்பது என்றைக்கும் பிடிக்காத விஷயம். அதில் எனக்கு உடன்பாடும் கிடையாது. 

சினிமா என்பது ஒரே குடும்பம். நடிகர் சங்கம் என்பது நடிக்கக்கூடிய ஒட்டுமொத்த நடிகர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டது. நான் 14 வயதில் இருந்து நடிகர் சங்கத்தின் கமிட்டியில் இருந்து வருகிறேன். 

எல்லோரும் என்னிடம் ஏன் இளைஞர்கள் அணியில் சேரவில்லை என்று கேட்கிறார்கள். இளைஞர்கள் அணியை நடத்துகிறார்கள், முதியவர்கள் அணியை நடத்துகிறார்கள் என்பது இங்கு முக்கியமில்லை. உண்மை எங்கிருக்கிறது என்பதுதான் முக்கியம்.

நமக்கு பிரச்சினை என்றால் யார் வந்து முதலில் நிற்பார்கள் என்பதுதான் இங்கு முக்கியம். நமக்குள் பிரிவினை இருப்பது என்பது மிகப்பெரிய கவலையளிக்கிறது. எங்கேயும் தப்பு நடக்கிறது என்றால் அதுக்கு குரல் கொடுக்க முதல் ஆளாக வந்து நிற்பேன். இந்த தேர்தலில் யார் ஜெயிக்கிறார்கள்? யார் தோற்கிறார்கள்? என்பது பற்றி கவலை இல்லை. என்றாலும், கடைசியில் உண்மைதான் ஜெயிக்கும் ” என்று தெரிவித்தார்.


Post your comment





Related News
சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
மீண்டும் வருவேன்; நம்புங்கள்! - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ
இணையதளத்தில் சிம்புவின் புதிய படம்: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்
அச்சம் என்பது மடமையடா மற்றொரு சிங்கிள் டிராக் விரைவில் வெளியீடு!
இம்மாதம் சிம்புவின் இது நம்ம ஆளு வெளியாகுமா?
இது நம்ம ஆளு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு பிறந்த நாளில் வெளியாகும் ‘இது நம்ம ஆளு’ பட ஆடியோ!
சிம்பு படம் 60 கோடி பிசினஸ்! ஆச்சரியத்தில் திரையுலகம்
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் புக்கான சிம்புவின் நாயகி!
பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சிம்பு சம்மதம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions