சிம்புவுக்கு ஆதரவாக நடிகர் சங்கத்தை முற்றுகையிட சென்ற 30 பேர் கைது

Bookmark and Share

சிம்புவுக்கு ஆதரவாக நடிகர் சங்கத்தை முற்றுகையிட சென்ற 30 பேர் கைது

ஆபாச பாடல் பிரச்சினையால் போலீஸ் வழக்கில் சிக்கியுள்ள நடிகர் சிம்புவுக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பு சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த அமைப்பின் தலைவர் வீரலட்சுமி தலைமையில் ஏராளமானோர் தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் கூடினார்கள்.

நடிகர் சிம்பு பிரச்சினையில் அவருக்கு ஆதரவாக செயல்படாமல் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக, நடிகர் சங்கத்தின் மீது புகார் கூறி முற்றுகை போராட்டம் நடத்த போவதாக, தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகம் உள்ள அபிபுல்லா சாலையை நோக்கி போராட்டக்காரர்கள் புறப்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

போராட்டக்காரர்கள் அப்போது நடிகர் சிம்புவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார்கள். பின்னர் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை எமிஜாக்சன் உருவ படத்தை அங்கு தீ வைத்து எரித்தார்கள். போலீஸ் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தப்பட்டதால் தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.


Post your comment





Related News
சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
மீண்டும் வருவேன்; நம்புங்கள்! - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ
இணையதளத்தில் சிம்புவின் புதிய படம்: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்
அச்சம் என்பது மடமையடா மற்றொரு சிங்கிள் டிராக் விரைவில் வெளியீடு!
இம்மாதம் சிம்புவின் இது நம்ம ஆளு வெளியாகுமா?
இது நம்ம ஆளு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு பிறந்த நாளில் வெளியாகும் ‘இது நம்ம ஆளு’ பட ஆடியோ!
சிம்பு படம் 60 கோடி பிசினஸ்! ஆச்சரியத்தில் திரையுலகம்
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் புக்கான சிம்புவின் நாயகி!
பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சிம்பு சம்மதம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions