சிம்புவுக்கு ஆதரவாக திரண்ட ரசிகர்களை போலீசார் கலைத்தனர்!

Bookmark and Share

சிம்புவுக்கு ஆதரவாக திரண்ட ரசிகர்களை போலீசார் கலைத்தனர்!

சிம்பு பாடிய ‘பீப்’ பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். சிம்புவுக்கு எதிராக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் சிம்புவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த சென்னையை சேர்ந்த அவரது ரசிகர்கள் சுமார் 50 பேர் சதீஷ், ஹரிகரன் தலைமையில் இன்று காலை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் அருகே திரண்டனர்.

தகவல் கிடைத்ததும் நுங்கம்பாக்கம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அங்கு நின்ற ரசிகர்களிடம், அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்த குவிந்துள்ளீர்கள். உங்களை கைது செய்யும் சூழ்நிலை ஏற்படும். எனவே கலைந்து செல்லும்படி எச்சரித்தனர்.

இதையடுத்து ரசிகர்கள் அங்கிருந்து புறப்பட்டு தி.நகர் இந்திபிரசார தெருவில் உள்ள டி.ராஜேந்தர் வீட்டில் குவிந்தனர். சுமார் 100–க்கும் மேற்பட்டோர் சிம்புவுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.

இதுபற்றி ரசிகர் ஹரிகரன் கூறும்போது, ‘சிம்புவின் பாடலை யாரோ திருடி வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


Post your comment





Related News
சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
மீண்டும் வருவேன்; நம்புங்கள்! - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ
இணையதளத்தில் சிம்புவின் புதிய படம்: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்
அச்சம் என்பது மடமையடா மற்றொரு சிங்கிள் டிராக் விரைவில் வெளியீடு!
இம்மாதம் சிம்புவின் இது நம்ம ஆளு வெளியாகுமா?
இது நம்ம ஆளு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு பிறந்த நாளில் வெளியாகும் ‘இது நம்ம ஆளு’ பட ஆடியோ!
சிம்பு படம் 60 கோடி பிசினஸ்! ஆச்சரியத்தில் திரையுலகம்
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் புக்கான சிம்புவின் நாயகி!
பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சிம்பு சம்மதம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions