சிம்பு படத்தில் அரசியல்?

Bookmark and Share

சிம்பு படத்தில் அரசியல்?

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் வாலு. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் வாலுவை தெலுங்கில் டப் செய்து, ஷார்ப் என்ற பெயரில் வெளியிட உள்ளனர்.

தெலுங்கு டப்பிங்கில் சிம்பு, டி.ஆர் போன்று பேசியிருந்த பல காட்சிகளை நீக்கி விட்டார்களாம். அந்த வகையில் சுமார் 10 நிமிட காட்சிகள் தெலுங்கிற்கு குறைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

அதோடு, ஷார்ப் டப்பிங் படம் என்றாலும், படத்தில் டப்பிங் வாடையே இல்லாத அளவுக்கு காட்சிகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம்.

அதாவது ஏதாவது காட்சிகளில் தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழ்நாட்டு தலைவர்கள் காட்சிகளின் பின்னணியில் தெரிந்தால் அவற்றை நீக்கி விட்டு தெலுங்கு எழுத்து மற்றும் ஆந்திர பிரபலங்களை பின்னணியில் இணைக்கிறார்களாம். அந்த வகையில், சிம்பு சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில் கருணாநிதி-ராமதாஸ் இருவரும் பேசிக்கொண்டிருக்கிற போஸ்டர் ஒரு சுவரில் ஒட்டப்பட்டிருக்கும்.

ஆனால் இப்போது அதை நீக்கிவிட்டு, அதே இடத்தில் ஆந்திர அரசியல்வாதிகளான ஜெகன்மோகன் ரெட்டி-சந்திரசேகரராவ் ஆகியோர் பேசிக்கொண்டிருப்பது போன்ற போஸ்டரை இணைத்துள்ளார்களாம்.

இதுபோன்று பல காட்சிகளில் ஆந்திர பிரபலங்களின் போஸ்டர்கள் ஷார்ப் படத்தில் இடம்பெறுகிறதாம். மேலும், படத்தை 300 தியேட்டர்கள் வரை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 


Post your comment





Related News
சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
மீண்டும் வருவேன்; நம்புங்கள்! - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ
இணையதளத்தில் சிம்புவின் புதிய படம்: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்
அச்சம் என்பது மடமையடா மற்றொரு சிங்கிள் டிராக் விரைவில் வெளியீடு!
இம்மாதம் சிம்புவின் இது நம்ம ஆளு வெளியாகுமா?
இது நம்ம ஆளு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு பிறந்த நாளில் வெளியாகும் ‘இது நம்ம ஆளு’ பட ஆடியோ!
சிம்பு படம் 60 கோடி பிசினஸ்! ஆச்சரியத்தில் திரையுலகம்
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் புக்கான சிம்புவின் நாயகி!
பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சிம்பு சம்மதம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions