சென்னை,கோவை போலீசில் 29-ம் தேதிக்குள் ஆஜராக சிம்புவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Bookmark and Share

சென்னை,கோவை போலீசில் 29-ம் தேதிக்குள் ஆஜராக சிம்புவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் சிம்பு பாடிய ஆபாச ‘பீப்’ பாடல் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகள், சிம்பு மற்றும் இந்த பாடலுக்கு இசையமைத்ததாக கூறப்படும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது போலீசில் புகார் செய்தனர். 

இதையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் உட்பட பல போலீஸ் நிலையங்களில் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் சிம்பு மனு தாக்கல் செய்தார். 

அப்போது, சிம்பு மீது பதிவான அனைத்து சட்டப்பிரிவுகளும் ஜாமீனில் வெளிவரக்கூடியது என்பதால், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளும்படி சிம்புவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 

அந்த உத்தரவில், கோவை மற்றும் சென்னையில் சிம்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு மட்டும் வருகிற 11–ந் தேதி சிம்பு ஆஜராகவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் சிம்பு ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘என் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீ சார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளேன். 

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நிலுவையில் உள்ளது. எனவே, ஜனவரி 11–ந் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகவேண்டும் என்று உத்தரவை மாற்றியமைக்கவேண்டும். போலீஸ் முன்பு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் சிம்பு, சென்னை போலீசில் மட்டும் ஆஜரானால்போதும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தேன். இந்த உத்தரவை மாற்றி அமைக்கிறேன்.

சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் மற்றும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் முன்பு வருகிற 29–ந்தேதிக்குள் சிம்பு ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிடுகிறேன்.


Post your comment





Related News
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்?
ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
சிம்புவின் TrendSong எப்படி வந்திருக்கிறது தெரியுமா- சிம்புவே சொல்கிறார்
பைரவா எல்லா பாடல் வரிகளும் இதோ!
சிம்பு வாழ்கையில் இன்று மறக்கமுடியாத ஒருநாள் ஏன் தெரியுமா?
கோவை கோர்ட்டில் ஆஜராகுமாறு அனிருத்துக்கு மீண்டும் சம்மன்
பீப் பாடலை பாடியது ஏன்? சிம்பு விளக்கம்!
பீப்பாடல் விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை: சிம்பு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions