கிராபிக்ஸ் காட்சிகள் மிகுந்த ஸ்ட்ராபெரி

Bookmark and Share

கிராபிக்ஸ் காட்சிகள் மிகுந்த ஸ்ட்ராபெரி

ஸ்ட்ராபெரி, பாடலாசிரியர் பா.விஜய் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படம். அவ்னிமோடி ஹீரோயினாக நடித்துள்ளார். சமுத்திரகனி, ரோபோ சங்கர், தம்பிராமைய்யா முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி வருகிற 11ந் தேதி வெளியிடுகிறது. படம் ரிலீசாவதையொட்டி பா.விஜய்  தன் பேட்டியில், “இது பேய் படம். இதற்கு எப்படியும் ஏ சான்றிதழ்தான் கொடுப்பார்கள் என்று தெரிந்தேதான் ஸ்ட்ராபெரி என்று பெயர் வைத்தேன்.

கதையில் ஸ்ட்ராபெரி பழம் ஒரு கேரக்டராகவே வருவதால் இந்தப் பெயர். பேய் பிடித்த ஒரு கால்டாக்சி டிரைவருக்கும், பேய் ஆராய்ச்சியாளருக்கும் இடையே வரும் காதலும், பிரச்னைகளும்தான் கதை. இந்த படத்துக்காக 2 வருடங்கள் கடுமையாக உழைத்திருக்கிறேன்.

என் சம்பாத்தியம் அத்தனையும் போட்டிருக்கிறேன். படத்தில் 40 நிமிடங்கள் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது. படத்தின் பட்ஜெட்டில் பாதி கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக செலவாகியிருக்கிது. கிராபிக்ஸ் பணிகள் மட்டும் 7 மாதம் நடந்திருக்கிறது.

படத்தின் நீளம் கருதி படமாக்கப்பட்ட ஒரு பாடல் காட்சியைகூட நீக்கி விட்டோம். தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி படத்தை வாங்கியிருப்பதே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி”, என்கிறார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions