கோடைவிடுமுறையை குத்தகைக்கு எடுத்துக் கொண்ட ஸ்டுடியோ கிரீன்!

Bookmark and Share

கோடைவிடுமுறையை குத்தகைக்கு எடுத்துக் கொண்ட ஸ்டுடியோ கிரீன்!

இந்த கோடைவிடுமுறையில் ஏகப்பட்ட படங்கள் தியேட்டருக்கு வர காத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றில் பல படங்கள் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள்! கொம்பன், ஓ காதல் கண்மணி, மாஸ், மகாபலி, ரஜினிமுருகன் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. இதில் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? இந்த ஐந்து படங்களையும் கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.

குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லக்ஷ்மிமேனன், ராஜ்கிரண் ஆகியோர் நடித்திருக்கும் கொம்பன் படத்தை மார்ச் 27ஆம் தேதி  வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் கே.ஈ.ஞானவேல் ராஜா.  இதேநாளில் சிம்புவின் வாலு படம் உட்பட இன்னும் ஒரு சில சிறிய படங்களும் வெளிவர வாய்ப்பிருக்கின்றன.

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் இயக்கி, தயாரித்திருக்கும் ஓ காதல் கண்மணி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே வாங்கியுள்ளது. இப்படத்தை தமிழ் வருடப் பிறப்பான ஏப்ரல் 10 அல்லது ஒரு வாரம் தள்ளி 17ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கின்றனர்.

வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, நடித்த படம் மாஸ். இதுவும் ஸ்டுடியோ கிரீனின் தயாரிப்புதான்.  மாஸ் படத்தை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி வெளியிடுகிறார்கள்.  

தெலுங்குப்பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்டத் தயாரிப்பான பாகுபலியின் தமிழ் பதிப்பான மகாபலி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே வாங்கி உள்ளது. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், நாசர் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும்  மகாபலி மே 22ஆம் தேதி வெளியாகிறது.

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடித்துக் கொண்டிருக்கும் ரஜினி முருகன் படத்துன் தமிழக உரிமையை ஸ்டுடியோ கிரீன் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை ஜூன் 2 ஆவது வாரத்தில் வெளியிட உள்ளது  ஸ்டுடியோ கிரீன். ஆக மொத்தம் இந்த கோடைவிடுமுறையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துக்கொண்டுவிட்டது.


Post your comment





Related News
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
இத்தனை கோடிக்கு விவேகம் விலைப்போகிறதா? கடும் ரிஸ்க்
நிவின் பாலி படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் நண்பர்!
யூடியூபில் நூற்றுக்கணக்கான இலவச திரைப்படங்களை வழங்கும் பாரமவுண்ட் நிறுவனம்
உத்தமவில்லன் வெளியாக 35 கோடி கொடுத்து உதவிய பிரபல தயாரிப்பாளர்...!
சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய ஸ்டுடியோ கிரீன்
அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு நடிக்க மறுக்கிறார்: விஜய் சேதுபதி மீது தயாரிப்பாளர் சரமாரி புகார்
வசந்தகுமாரன் படத்தில் நடிக்கவில்லை.. என்னை திட்டி மிரட்டுகிறார் தயாரிப்பாளர்!- விஜய் சேதுபதி
இயற்கையை பாதுகாக்கும் பசுமை இயக்கத்தில் டாப்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions