இயக்குனராக அவதாரமெடுக்கும் பிரபல சண்டை பயிற்சியாளர்

Bookmark and Share

இயக்குனராக அவதாரமெடுக்கும் பிரபல சண்டை பயிற்சியாளர்

‘வேட்டையாடு விளையாடு’, ‘காவலன்’, ‘கஜினி’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர் ஸ்டண்ட் சிவா. இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கும் புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

மேலும், இப்படத்தில் கெவின், ஸ்டிவின், லேனி ஹவ், ரோஹினி, ஜூனியர் பாலையா, நந்தா பெரியசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை லேனி ஹவ் எழுத, திரைக்கதை, எழுதி இயக்குகிறார் ஸ்டண்ட் சிவா.

கேரா ஜெரிமீயா என்பவர் இசையமைக்கும் இப்படத்துக்கு என்.எஸ்.உதய் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தொடங்கி வைத்தார். மேலும், இயக்குனர் பிரபு சாலமன் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இப்படத்தை 7 ஸ்டார் யூனிவர்சல் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பாக லேனி ஹவ் தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகன் கதாபாத்திரத்தை மனதில் நினைத்துக் கொண்டு படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும், தன்னையும் நாயகனுடன் ஒப்பிட்டு பார்க்கும் வகையிலும், நாயகனை போன்ற குணாதிசயங்கள் நமக்கும் தோன்றாதா? என்று என்னும் வகையிலும் கதையை வடிவமைத்துள்ளனர். 

 


Post your comment





Related News
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா
விஜய் சார் சொன்ன ஆறுதலால் தான் என் தங்கை சாப்பிட்டார்- பிரபல கலைஞர் உருக்கம்
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions