மோகன்லாலின் தைரியத்தை கண்டு வியந்த ஸ்டண்ட் சில்வா..!

Bookmark and Share

மோகன்லாலின் தைரியத்தை கண்டு வியந்த ஸ்டண்ட் சில்வா..!

ஒரு படம் ஹிட்டானால் அடுத்த படத்திலும் அந்த கூட்டணி தொடர்வதுதானே வழக்கம். இதற்கு மலையாள சினிமா மட்டும் விதிவிலக்காகி விடுமா என்ன? அந்த வகையில் பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி  இயக்கி கடந்த 2012ல் வெளியான சூப்பர்ஹிட் படம் 'ரன் பேபி ரன்'.

அதன்பின் மோகன்லாலை வைத்து 'லோக்பால்' என்ற படத்தை இயக்கினார் ஜோஷி. ஆனால் 'ரன் பேபி ரன்' படத்தைப்போல இதற்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை.

இருந்தாலும் லஞ்ச ஊழலுக்கு எதிரான ஒரு நல்லபடம் என்ற பெயரை பெற்றது. இப்போது மீண்டும் ஜோஷியின் டைரக்ஷனில் நடித்து வருகிறார் மோகன்லால். படத்தின் பெயர் 'லைலா ஓ லைலா'.

இந்தப்படத்தில் மோகன்லாலுடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார் அமலாபால். இந்தப்படத்தின் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்து வருபவர் ஸ்டண்ட் சில்வா. தமிழில் விஜய், அஜித், சூர்யாவின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பதுபோல மலையாளத்தில் மோகன்லாலின் படங்களுக்கும் இவர்தான் சண்டைக்காட்சிகளை வடிவமைத்து வருகிறார்.

அந்த நட்பின் காரணமாகத்தான் 'மிஸ்டர் பிராடு' படத்தில் க்ளைமாக்ஸில் தனது பாடிகார்டாக ஸ்டண்ட் சில்வாவுக்கு ஒரு கேரக்டரையும் கொடுத்து நடிக்க வைத்திருந்தார் மோகன்லால்.

கொச்சி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் சமீபத்தில் 'லைலா ஓ லைலா' படப்பிடிப்பில், படத்தின் சண்டைக்காட்சிகளை படமாக்கும்போது ரிஸ்க் கொஞ்சம் அதிகமாகவே இருந்ததால், மோகன்லாலுக்கு பதிலாக டூப் போட்டுவிடலாம் என நினைத்திருக்கிறார் சில்வா.

ஆனால் ஸ்ட்ரிக்ட்டாக அதை மறுத்த மோகன்லால் சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சி முழுவதும் தானே நடித்திருக்கிறார். மோகன்லாலின் துணிச்சலையும் ஆர்வத்தையும் பார்த்து வியந்து போனாராம் சில்வா.

காமெடி கலந்த த்ரில்லராக உருவாக இருக்கும் இந்தப்படம் ஜோஷியின் முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு இருக்குமாம். காரணம் படத்தின் கதையை எழுதியிருப்பவர் இந்தியில் வெற்றிபெற்ற 'கஹானி' மற்றும் 'டி-டே' ஆகிய படங்களின் கதாசிரியரான சுரேஷ் நாயர். 


Post your comment





Related News
விஜய் சார் சொன்ன ஆறுதலால் தான் என் தங்கை சாப்பிட்டார்- பிரபல கலைஞர் உருக்கம்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
குழந்தையின் சிகிச்சைக்கு பணம் கிடைத்ததோடு நிற்கவில்லை, தெறி வில்லன் செய்த மற்றொரு நிகழ்வு
அஜித்தின் மாஸான உடலமைப்பு- மனம் திறந்து பேசிய உடற்பயிற்சியாளர்
பெண்கள் பிரச்சனையில் பல்கேரியா போலீஸிடம் சிக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் – அஜித் உதவியால் வெளியே வந்தார்?
இயக்குனராக அவதாரமெடுக்கும் பிரபல சண்டை பயிற்சியாளர்
ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்புவார் \'தல\' - ‘ஸ்டண்ட்’ சில்வா
மணிரத்னம் இயக்காத மணிரத்னம் படம்
செல்வராகவன் – கீதாஞ்சலிக்கு போனில் வாழ்த்து தெரிவித்த ரஜினி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions