டெரர் வில்லனாக சுப்பு பஞ்சு!

Bookmark and Share

டெரர் வில்லனாக சுப்பு பஞ்சு!

ராதிகாவின் அரசி சீரியலில் வில்லனாக நடித்தவர் சுப்பு பஞ்சு. அந்த சமயத்தில் இவரை திட்டித்தீர்க்காத தமிழ்நாட்டு பெண்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவரது வில்லன் நடிப்பு இருந்தது.

ஆனால் அதையடுத்து, சினிமாவில் ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இவர் நடிக்க ஒப்பந்தமானபோது அப்படத்தின் டைரக்டர் ராஜேஷ்.எம், வில்லன் நடிகரான இவரை எப்படி காமெடி வேடத்தில் நடிக்க வைக்கப்போகிறோம் என்று ரொம்பவே பயந்தாராம். அதனால் கடைசிவரை சுப்புவை அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லையாம்.

ஒருவழியாக இரண்டு மனதாக பின்னர் நடிக்க வைத்தாராம். ஆனால், முதல்நாள் படப்பிடிப்பு முடிந்ததுமே, வில்லனாக நடித்தவரால் எப்படி காமெடி வேடத்தில் நடிக்க முடியும் என்றுதான் நான் தயங்கினேன். இப்போது அந்த தயக்கம் இல்லை.

உங்களுக்கு காமெடியும் நன்றாக வருகிறது என்றாராம் டைரக்டர் ராஜேஷ்.எம்.இப்படியாக சினிமாவில் பின்னர் காமெடி, கேரக்டர் என்று நடித்து வரும் சுப்பு பஞ்சு, இப்போது நாரதன் படத்தில் மீண்டும் வில்லனாகியிருக்கிறார். அதுவும் அதிரடியான வில்லனாம்.

அரசி சீரியலில் இவரது அதிரடியான நடிப்புத்தான் இந்த வாய்ப்பை பெற்றுக்கொடுத்திருக்கிறதாம்.

இப்படத்தில் டெரர் வில்லனாக நடித்திருப்பதாக சொல்லும் சுப்பு பஞ்சு, இனிமேல் ஒரே மாதிரியாக இல்லாமல் எல்லாவிதமான வேடங்களிலும் கலந்து நடிக்கவே ஆசைப்படுகிறாராம். அதிலும் வில்லன் வேடங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்போகிறாராம்.


Post your comment





Related News
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்
ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
அரசியல் விசயத்தில் ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு! எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இப்படி ஒரு வரவேற்பா! சூப்பரான செய்தி
நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions