சுசித்ராவை தொடர்ந்து, ஸ்ரீதேவியின் கணவரும் புகார்

Bookmark and Share

சுசித்ராவை தொடர்ந்து, ஸ்ரீதேவியின் கணவரும் புகார்

பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் பல்வேறு நடிகைகளின் நிர்வாண படம் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது. தன் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என அவர் கூறியிருந்தார்.

அதன் பிறகு நடிகை மடோனா உட்பட பல்வேறு நடிகர்களின் ட்விட்டர் கணக்கள் விஷமிகள் ஹேக் செய்வது வாடிக்கையாகியுள்ளது.

தற்போது நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டனர். அதனால் அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

ஹேக் செய்தவன் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு மெசேஜ் செய்து தன பேடிஎம் கணக்கில் 10 ஆயிரம், 5 ஆயிரம் டெபாசிட் செய்யுங்கள் என கேட்டுள்ளது தெரியவந்தபிறகுதான் தன் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions