இதை திசை திருப்ப தான் சுசி விஷயம் வெளிவந்ததா? குழப்பத்தில் மக்கள்

Bookmark and Share

இதை திசை திருப்ப தான் சுசி விஷயம் வெளிவந்ததா? குழப்பத்தில் மக்கள்

தமிழக மக்கள் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாகவே உள்ளனர். எந்த பக்கம் திரும்பினாலும் ப்ரேக்கிங் நியூஸ் கேட்டு கேட்டு சலித்து போய்விட்டனர்.

எங்கு சென்றாலும் போராட்டம், எதற்கும் போராட்டம் என அசாதாரண சூழல் நிகழ்ந்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது ஹைட்ரோகார்பன் எடுப்பதை கைவிடச்சொல்லி நெடுவாசலில் மக்கள் பல நாட்களாக போராடி வருகின்றனர்.

மீடியாவின் வெளிச்சம் அதன் மீது இருக்க, சமூக வலைத்தளங்களிலும் நெடுவாசல் குறித்து பேசப்பட்டு வருகின்றது.

ஆனால், கடந்த சில நாட்களாக சுசித்ரா வெளியிடும் ஆபாச புகைப்படங்கள் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது.

நெடுவாசல் குறித்து ஒரு டுவிட் கூட இல்லை, ஒருவேளை இந்த பிரச்சனையை திசை திருப்ப தான் வேண்டுமென்றே யாரோ இந்த விஷயத்தை கொண்டு வருகின்றனர் என விஷயம் அறிந்தவர்கள் பேசி வருகின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions