தமிழில் ரிலீசாகிறது கன்னட சுதீப்பின் 10 வருட பழைய படம்

Bookmark and Share

தமிழில் ரிலீசாகிறது கன்னட சுதீப்பின் 10 வருட பழைய படம்

கன்னட நடிகர் சுதீப் நடித்த கன்னட படம் ஷூப்லி. 2006ம் ஆண்டு வெளிவந்த படம். ரக்ஷிதா ஹீரோயின். கமர்ஷியல் பட இயக்குனர் ஓம்பிரகாஷ் ராவ் இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ஹேமந்த் இசை அமைத்திருந்தார், கே.எம்.விஷ்ணுவர்த்தன் ஒளிப்பதிவு செய்திருந்தார். சுதீப் அதிரடி போலீசாக நடித்திருந்தார்.

ரக்ஷிதா கவர்ச்சியாக நடித்திருந்தார். படம் கமர்ஷியல் ஹிட்.பத்து வருடங்களுக்கு பிறகு அந்தப் படத்தை தூசி தட்டி எடுத்து தமிழில் டப் செய்து வருகிற 20ந் தேதி வெளியிடுகிறார்கள்.

நான் சத்ரியன் என்ற டைட்டில் வைத்திருக்கிறார்கள். கலர் புரொடக்ஷன் சார்பில் ஏ.பாலசுப்பிரமணி, கோபி, செல்வ சிவம் ஆகியோர் வெளியிடுகிறார்கள். சஞ்சய் தமிழ் வசனங்களை எழுதி உள்ளார்.

பழனிராஜ் பாடல்களை எழுதியுள்ளார். நான் ஈ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு சுதீப் அறிமுகமானார். தற்போது விஜய்யின் புலி படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

கே.எஸ்.ரவிகுமார் அடுத்து இயக்கப்போகும் கன்னடம், தமிழ் இரண்டு மொழி படத்தில் சுதீப் நடிக்கிறார். இப்படி தமிழ் நாட்டுக்கு சுதீப் நெருக்கமாகி வருவதால் அவரது பழைய கன்னடப் படங்களை வாங்கி தமிழில் டப் செய்து வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் இது நான்காவது படம்.


Post your comment





Related News
அந்த நடிகர்களுக்கு அப்புறம் இந்த நடிகர் தான் - அடித்து சொல்லும் சுசீந்திரன்.!
விவாகரத்து பெற நினைத்த நடிகர் இப்போது சேர்ந்து வாழ நினைக்கிறாரா? நடிகருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்
ரஜினியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் இணைந்த எமி ஜாக்சன்- ஆனால்?
அஜித்தும் நானும் செம தோஸ்த் – புலி வில்லன்!
புலி படத்தை இயக்குனர் வீணடித்துவிட்டார் – சுதீப் ஓபன் டாக்!
கூடுதலாக 120 திரையரங்குகளில் வெளியாகும் முடிஞ்சா இவன புடி!
கன்னடத்தில் “முடிஞ்சா இவன புடி” 22 கோடி வசூல்!
அஜித் படத்தில் நடிக்க ஆசைப்படும் கன்னட சூப்பர்ஸ்டார்!
சுதீப்புடன் நடிக்க ஆசை : தனுஷ் பேச்சு
நடிகர் சுதீப் திடீர் மருத்துவமனையில் அனுமதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions