தமிழில் மார்க்கெட்டை பிடிக்கும் நான் ஈ சுதீப்!

Bookmark and Share

தமிழில் மார்க்கெட்டை பிடிக்கும் நான் ஈ சுதீப்!

ராஜமவுலி இயக்கிய நான் ஈ படம் வெளியானபோதே அப்படத்தில் வில்லனாக நடித்திருந்த கன்னட நடிகர் சுதீப் தமிழில் புதிய படங்களில் கமிட்டாகி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்பிறகு ஒரு படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடந்தபோது அதில் கலந்து கொண்ட சுதீப், வித்தியாசமான கதைகள் கிடைத்தால் நேரடி தமிழ் படத்தில் நடிப்பேன் என்றும் சொன்னார்.

மேலும், நான்ஈ படத்திற்கு முன்பே தமிழில் சூர்யா நடித்திருந்த ரத்த சரித்திரம் படத்தில் நடித்திருந்த சுதீப், தற்போது பாகுபலி மற்றும் விஜய்யின் புலி படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த படங்கள் வெளியாகும் நேரத்தில் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிசட்யமாக நடிகராகி விடுவார் சுதீப்.

அதனால், நான்ஈ படத்திற்கு பிறகு உடனடியாக தமிழில் ஹீரோ வாய்ப்பு கிடைக்காததால் நடிக்காமல் இருந்த சுதீப், இப்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நேரடியாக தமிழில் ஹீரோவாக என்ட்ரி ஆகிறார்.

அடுத்த மாதம் தொடங்கயிருக்கும் அப்படம் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் தயாராகயிருப்பதாக செய்திகள் வெளியானபோதும், இப்போது விசாரித்தால் அப்படம் நேரடியாக தமிழில் மட்டுமே உருவாகிறது. கன்னடத்தில் டப் செய்யப்படுகிறது என்கிறார்கள்.

ஆக, கே.எஸ்.ரவிக்குமார் படத்திற்கு பிறகு தமிழில் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கவும் திட்டமிட்டுள்ளாராம் கன்னட நடிகர் சுதீப்.


Post your comment





Related News
அந்த நடிகர்களுக்கு அப்புறம் இந்த நடிகர் தான் - அடித்து சொல்லும் சுசீந்திரன்.!
விவாகரத்து பெற நினைத்த நடிகர் இப்போது சேர்ந்து வாழ நினைக்கிறாரா? நடிகருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்
ரஜினியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் இணைந்த எமி ஜாக்சன்- ஆனால்?
அஜித்தும் நானும் செம தோஸ்த் – புலி வில்லன்!
புலி படத்தை இயக்குனர் வீணடித்துவிட்டார் – சுதீப் ஓபன் டாக்!
கூடுதலாக 120 திரையரங்குகளில் வெளியாகும் முடிஞ்சா இவன புடி!
கன்னடத்தில் “முடிஞ்சா இவன புடி” 22 கோடி வசூல்!
அஜித் படத்தில் நடிக்க ஆசைப்படும் கன்னட சூப்பர்ஸ்டார்!
சுதீப்புடன் நடிக்க ஆசை : தனுஷ் பேச்சு
நடிகர் சுதீப் திடீர் மருத்துவமனையில் அனுமதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions