புனீத் ராஜ்குமாரை காப்பியடிக்கிறாரா சுதீப்..?

Bookmark and Share

புனீத் ராஜ்குமாரை காப்பியடிக்கிறாரா சுதீப்..?

சில விஷயங்கள் ஏதேச்சையாக நடந்தது மாதிரியும் தெரியும்.. இன்னும் சிலரின் பார்வைக்கோ அது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட மாதிரி தெரியும். அப்படி ஒரு சிக்கல் தான் இப்போது 'நான் ஈ' புகழ் சுதீப்பிற்கும் ஏற்பட்டுள்ளது.

சுதீப் தற்போது கன்னடத்தில் நடித்து வரும் படம் 'ராணா'. தெலுங்கில் பவன்கல்யாண் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான, அத்தரிண்டிகி தாரெதி' படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் தான் இந்தப்படம்.

நந்தா கிஷோர் என்பவர் படத்தை இயக்குகிறார். இப்போது சிக்கல் என்னவென்றால் சுதீப் இந்தப்படத்தில் எல்லா விஷயங்களிலும் புனீத் ராஜ்குமாரை காப்பியடிக்கிறார் என்கிற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்.

முதல் காரணம் புனீத் நடிக்கும் படத்தின் பெயர் ராணா விக்ரமா.. கடந்த வருடம் மார்ச் மாதமே இந்தப்படத்தின் டைட்டிலுடன் பூஜையும் போட்டார் புனீத். ஆனால் சுதீப் தன் படத்திற்கு 'ராணா' என டைட்டில் வைத்தது செப்டம்பரில் தான்.

அப்போதே டைட்டிலை காப்பியடித்து குழப்பத்தை ஏற்படுத்திகிறார் சுதீப் என்கிற பேச்சு எழுந்தது. சமீபத்தில் இத்தாலியில் உள்ள மிலன் உள்ளிட்ட சில நகரங்களில் படப்பிடிப்பை நடத்தி விட்டு வந்துள்ளது 'ராணா விக்ரமா' படக்குழு. ஆனால் அதே இத்தாலிக்குத்தான் அடுத்ததாக கிளம்ப உள்ளதாம் 'ராணா' டீம்.

முன்னவர்கள் வசனக்காட்சிகளை படமாக்கினார்கள் என்றால் இவர்கள் பாடல்காட்சியை படமாக்க உள்ளார்களாம். அவ்வளவுதான் வித்தியாசம். இன்னொரு ஆச்சர்யமான ஒற்றுமை இரண்டு படங்களுக்கும் ஹரிகிருஷ்ணா என்பவர்தான் இசையமைக்கிறார்.

இந்த சிக்கல் போதாதென்று இரண்டு படங்களுக்குமே மார்ச்-20 ஆம் தேதிதான் ரிலீஸ் தேதியாக குறித்துள்ளார்களாம். இதெல்லாம் ஏதேச்சையாக நடக்கிறதா, இல்லை திட்டமிடப்பட்டதா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்...


Post your comment





Related News
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions