தன் படத்தில் மகனை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்த அப்பா!

Bookmark and Share

தன் படத்தில் மகனை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்த அப்பா!

டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் சுதீர் பாபு நாயகனாக நடித்துள்ள மோசகலக்கு மோசகடு படம் மே மாதம் 22 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் சுதீர் பாபுவின் மகன் சரித் மானஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சரித் மானஸ் இளம் வயது சுதீர் வேடத்தில் நடித்துள்ளதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் சுதீருக்கு ஜோடியாக நடிகை நந்தினி நடித்துள்ளார். இவர்களுடன் அபிமன்யா சிங், ஜெய பிரகாஷ் ரெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்குநர் போஸ் நெல்லூரி இயக்கியுள்ளார். அண்மையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் சுதீர் பாபு தெலுங்கு திரையின் இளம் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தங்கை கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions