சுதீர் பட ஆடியோ ரிலீசில் பிரின்ஸ் மகேஷ்பாபு?

Bookmark and Share

சுதீர் பட ஆடியோ ரிலீசில் பிரின்ஸ் மகேஷ்பாபு?

பிரபல ஹீரோவான சுதீர் பாபுவின் புதிய படமான மொசகல்லகு மொசகடுவின் பாடல் வெளியீட்டு விழாவில் பிரின்ஸ் மகேஷ் பாபு கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கு காரணமும் உண்டு. இருவரும் உறவினர்கள் என்பது நினைவிருக்கலாம். இவர் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் இளைய மகளான பிரியதர்சினியின் கணவராவார். மொசகல்லகு  மொசகடுவில் ராக்கிங் ஸ்டார் மஞ்சு  மனோஜ் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஆடியோ வரும் 26ம் தேதி ரிலீஸ் ஆகின்றது. அந்த நிகழ்ச்சியில்தான் பிரின்ஸ் மகேஷ் பாபு கலந்து கொள்வார் என்று தெரிகிறது. கடந்த 1971ம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா நடித்த படம் மொசகல்லகு  மொசகடு என்பது நினைவிருக்கலாம்.

அந்த படம் மெகா ஹிட்டாகி கிருஷ்ணாவிற்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதே பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டு வரும் புதிய படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சுதீருக்கு பிரபல நடிகையான நந்தினி ஜோடியாக நடிக்கிறார். போஸ் நெல்லுரி இயக்கும் இந்த படத்தை சக்ரி சிகுருபதி தயாரிக்கிறார்.

சம்மரில் ரிலீஸ் ஆகா இருக்கும் இந்த படத்தில் அபிமன்யு சிங், ஜெயபிரகாஷ்  ரெட்டி, துவ்வசி  மோகன் மற்றும்  பிரவீன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

 


Post your comment





Related News
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions