பெண் டெக்னீஷியன்கள் பாதுகாப்புக்காக படப்பிடிப்பை ரத்து செய்த டைரக்டர்

Bookmark and Share

பெண் டெக்னீஷியன்கள் பாதுகாப்புக்காக படப்பிடிப்பை ரத்து செய்த டைரக்டர்

'சிருங்காரம்'  அதிதி ராவ் நடிப்பில் பாலிவுட் இயக்குனர் சுதிர் மிஸ்ரா ‘அவுர் ஏக் தேவதாஸ்‘ என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். டெல்லியில் இதன் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருந்தது. ஆனால் பட யூனிட்டில் இருக்கும் பெண்களுக்கு டெல்லியில் பாதுகாப்பு இல்லை‘ என படப்பிடிப்பை ரத்து செய்திருக்கிறார்.

இதுபற்றி டுவிட்டர் பக்கத்தில் அவர்,

‘டெல்லியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நள்ளிரவில் எனது பட ஷூட்டிங்கை நடத்த இருந்தேன். திடீரென்று அதை ரத்து செய்துவிட்டேன். படத்தின் லைன் தயாரிப்பாளர், பட யூனிட்டுக்கும் அதில் பணிபுரியும் பெண்களுக்கும் பாதுகாப்புக்கு உறுதி தரவில்லை. இதனாலேயே படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

டெல்லி எனக்கு ரொம்பவும் பிடித்த இடம். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் படப்பிடிப்பு நடத்த பயமாக இருக்கிறது. நல்ல வேளையாக இதன் கடைசி நாள் ஷூட்டிங்கும் மும்பை அருகிலேயே முடித்திருக்கிறேன்‘ என்றார்.

தமிழில் சிருங்காரம் படத்தில் நடித்த அதிதி ராவ் இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதுடன் ' கேங்க்ஸ் ஆப் வசேபுர்'  இந்தி படத்தில் நடித்த ரிச்சா சத்தா மற்றும் பரோ, சாந்தினி, சந்திரமுகி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions