நடிகை சுகன்யா குலதெய்வம் கோவிலில் கொள்ளை

Bookmark and Share

நடிகை சுகன்யா குலதெய்வம் கோவிலில் கொள்ளை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே திருநந்திபுரம் கிராமத்தில் நடிகை சுகன்யாவின் குலதெய்வ கோவிலான செம்பனேரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நடிகை சுகன்யா அடிக்கடி சென்று வழிபடுவது வழக்கம். 

கடந்த 2 மாதத்துக்கு முன்பு இக்கோவில் வளாகத்தில் சாமி சிலைகள் புதைந்து கிடப்பதாக நடிகை சுகன்யா தனது கனவில் வந்ததாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வழக்கம் போல் பூஜை செய்ய இக்கோவில் பூசாரி அய்யனார் இன்று காலை கோவிலுக்கு வந்தார். 

அப்போது கோவிலின் முன்பக்க இரும்பு கேட் ஆக்சா பிளேடால் அறுக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு சில்லரை காசுகள் சிதறி கிடந்தது. 

யாரோ மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் கோவில் கதவை உடைத்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் பெரிய தச்சூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

மேலும் வழக்கு பதிவு செய்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions