மாடு படத்தில் நாயகனாக அறிமுகமாகவிருக்கும் ஒளிப்பதிவாளர்

Bookmark and Share

மாடு படத்தில் நாயகனாக அறிமுகமாகவிருக்கும் ஒளிப்பதிவாளர்

மைனா, கும்கி, நிமிர்ந்து நில், மான் கராத்தே, காக்கி சட்டை உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் எம்.சுகுமார்.

விரைவில் இவர் நாயகனாக அரிதாரம் பூச இருக்கிறார். படத்திற்கு கூட மாடு என்கிற தலைப்பு வைத்துவிட்டார்கள்.

இந்தப் படத்தை யுரேகா இயக்கவிருக்கிறார். தற்போது இவர் ‘தொப்பி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவை எம்.சுகுமார் கவனித்து வருகிறார்.

முதலில் இப்படத்தில் நாயகனாக நடிக்க சுகுமாரிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் நடிக்கவில்லையாம். இந்நிலையில் யுரேகா தான் அடுத்ததாக இயக்கவிருக்கும் ‘மாடு’ என்ற படத்தில் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரை நாயகனாக அறிமுகப்படுத்தவிருக்கிறார்.

படத்தில் பங்குபெறவிருக்கும் மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும். யுரேகா மதுரை சம்பவம், சிவப்பு ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions