காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக கருத்து கூறினேனா?- நடிகை சுகாசினி விளக்கம்

Bookmark and Share

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக கருத்து கூறினேனா?- நடிகை சுகாசினி விளக்கம்

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் காரணமாக இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

காவிரி விவகாரத்தில் நடிகை சுகாசினி கர்நாடக மாநிலத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

இந்நிலையில் காவிரி பிரச்சினையில் தான் எந்தக் கருத்தும் கூறவில்லை என்று நடிகை சுகாசினி விளக்கமளித்துள்ளார். "சமூக வலைதளங்களான ட்விட்டர், வாட்ஸ்ஆப் போன்றவற்றில் நான் காவிரி விவகாரம் தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அது முற்றிலும் தவறானது. எனது சமூக வலைதளத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக எந்தவிதமான கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை. மேலும் ஊடகங்களுக்கும் இது தொடர்பாக நான் பேட்டியளிக்கவில்லை. இதுபோன்ற தவறான தகவல்களை நம்பவேண்டாம்''. இவ்வாறு நடிகை சுகாசினி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions