நம்பிக்கை இருந்தால் முன்னேறலாம்: சுகாசினி பேட்டி

Bookmark and Share

நம்பிக்கை இருந்தால் முன்னேறலாம்: சுகாசினி பேட்டி

கோவையில் உள்ள வணிக மற்றும் கைத்தொழில் சம்மேளன கூட்டமைப்பின் மகளிர் அமைப்பு (எப்.ஐ.சி.சி.ஐ) சார்பில் சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கும் விழா கோவையில் நடந்தது.

கோவையை சேர்ந்த தொழில் முனைவோரான ரஞ்சனா மற்றும் டி.யுவராணி ஆகியோருக்கு ‘சாதனா-2016’ என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நடிகை சுகாசினி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்களின் முன்னேற்றத்தில் பெண்கள் இருப்பார்கள் என்று கூறுவார்கள். அதுபோன்று ஒவ்வொரு பெண்கள் முன்னேற்றத்திலும் ஆண்கள் கண்டிப்பாக இருப்பார்கள்.

குழந்தைகளை வளர்ப்பது,சமையல் செய்வது என்பது உள்பட பெண்களுக்கு வீட்டில் பொறுப்பு அதிகம் இருக்கிறது. அந்த பொறுப்புகள் இருந்தாலும், அதை பெரிதுபடுத்தாமல் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு வேண்டும்.

தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்துத்துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறார்கள். இது பாராட்டுக்குரியது. எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் பெண்கள் சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். எதையும் நினைத்து கவலைப்படக்கூடாது.

தொழில் செய்தால் அதில் சில சறுக்கல்கள் ஏற்பட்டாலும், அதையே நினைத்து வீட்டில் முடங்கிவிடக்கூடாது. நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் தடைகளை தாண்டி நம்மால் கண்டிப்பாக முன்னேறலாம்.

நான் முதலில் நடிக்க வந்தபோது எனக்கு ரூ.5 ஆயிரம்தான் சம்பளம் கொடுத்தார்கள். அப்போது நான் அதை குறைவாக நினைக்கவில்லை. என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்ததால்தான் சினிமா உலகில் என்னால் சாதிக்க முடிந்தது.

எனது சித்தப்பா கமல்ஹாசனை பற்றிக்கூற வேண்டும் என்றால் அவர் மிகவும் எளிமையானவர். பெண்கள் மீது பண்பும், மரியாதையும் வைத்திருப்பவர்.
இவ்வாறு நடிகை சுகாசினி பேசினார்.


Post your comment





Related News
மணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா
மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!
மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.!
மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.!
மணிரத்தினம் படத்தில் இருந்து விலகும் மெகா ஹிட் நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.!
20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா?
மெகா ஹிட் இயக்குனர் மணிரத்தினம் படத்தில் இந்த பிக் பாஸ் பிரபலமா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions