பாதித்த மக்களுக்கு புதிய உடைகளை வாங்கி கொடுங்கள்: சுஹாசினி வேண்டுகோள்

Bookmark and Share

பாதித்த மக்களுக்கு புதிய உடைகளை வாங்கி கொடுங்கள்: சுஹாசினி வேண்டுகோள்

டைரக்டர் மணிரத்னம் அவரது மனைவி சுஹாசினி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வீடாக சென்று அரிசி மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

வீடுகளுக்கு இவர்கள் வழங்கும் பைகளில் 10 கிலோ அரிசி, 10 கிலோ வெங்காயம், உருளைகிழங்கு, புளி, உப்பு, மஞ்சள்பொடி, 1 லிட்டர் எண்ணை, மசாலா பொருட்கள், குழந்தை களுக்கான பால் பவுடர், டெட்டால், மருந்து பொருட்கள், பெண்களுக்கு தேவையான பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. 

இசை அமைப்பாளர் இளையராஜா 1 லட்சம் போர்வைகளை வட சென்னை பகுதியில் வழங்கி உள்ளார். பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்களும் அண்டை வீட்டை சேர்ந்தவர்களுக்கு உதவுகிறார்கள். 

சிலர் பழைய துணிகள் மற்றும் பொருட்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுஹாசினி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:–

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது மனிதாபிமானம். அதையும் பாதுகாப்பாக உதவுங்கள். பீரோவில் அடைத்துக் கொண்டிருக்கும் பழைய உடைகளையோ, வீட்டில் தேவை இல்லாமல் இருக்கும் பழைய பொருட்களையோ கொடுக்க வேண்டாம். 

நீங்கள் பயன்படுத்திய உடைகள் நல்ல நிலையில் இருந்தால் அதை உங்கள் உறவினருக்கு கொடுக்கலாம். அதைவிட்டு அநாதையாக தவிப்பவர்களுக்கு அதை கொடுக்க வேண்டாம். 120 ரூபாய்க்கு சேலை கிடைக்கிறது.

எனவே உதவி செய்ய விரும்பினால் புதிய துணி, புதிய பொருட்களை வாங்கி கொடுங்கள். பழைய பொருட்களை கொடுக்கும் முன்பு சில நிமிடங்கள் யோசியுங்கள். உண்மையான நல்ல நோக்கத்துடன் உதவி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
நிஜ உலகில் இவர்கள் இப்படியா செய்தார்கள்?
நம்பிக்கை இருந்தால் முன்னேறலாம்: சுகாசினி பேட்டி
எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது பீப் பாடல் முக்கியமா? - சுஹாசினி மணிரத்னம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மணிரத்னம் - சுஹாசினி தம்பதி
சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு :கனமழை எதிரொலி
இயக்குநர் மணிரத்னம், மனைவி சுகாசினி குறித்து அவதூறாகப் பேசத் தடை விதித்த‌ உயர் நீதிமன்றம்!
மணியின் படத்தில் மீண்டும் ஐஸ்வர்யாராய்? சுஹாசினி விளக்கம்!
எங்களுக்கு எம்.ஜி.ஆர், கமல், அஜீத் மாதிரி ஹீரோக்கள்தான் வேண்டும் :சுஹாசினி !
பதில் சொல்ல முடியாமல் திணறிய சுஹாசினி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions