
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க, மக்கள் பீப் பாடலுக்கு இந்தளவு முக்கியத்துவம் தர வேண்டுமா? என்று நடிகை சுஹாசினி மணிரத்னம் கேள்வி எழுப்பி இருக்கிறார். சிம்பு, அனிருத் பீப் பாடல் விவகாரத்தில் ஒட்டுமொத்தத் திரையுலகினரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலும் தமிழ் சினிமாவில் சிம்புவுக்கு எதிரான சூழலே நிலவுகிறது.
இந்நிலையில் நடிகை சுஹாசினி" நாட்டில் நிறைய பிரச்சினைகள் இருக்கும்போது இப்படி ஒரு பாடலைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டுமா? வெள்ள நிவாரணப் பணியில் இருக்கலாம், ஏதாவது படிக்கலாம்.
இல்லையெனில் நாட்டில் நடக்கும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம். சமீபத்தில் நமக்காகப் போராடிய 10 பேர் விமான விபத்தில் இறந்து போயிருக்கின்றனர் அதைப் பற்றி பேசலாம். எப்போது பார்த்தாலும் சினிமா, சினிமா என்று சினிமாவிலேயே மக்கள் இருக்க வேண்டாமே". என்று பீப் பாடல் விவகாரத்தில் சுஹாசினி கருத்து தெரிவித்திருக்கிறார்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம் சூர்யா நகரை சுஹாசினி- மணிரத்னம் தம்பதியர் சமீபத்தில் தத்தெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Post your comment