போலீஸ் ஸ்டேஷனில் குத்தாட்டம் போட்ட சுஜிபாலா

Bookmark and Share

போலீஸ் ஸ்டேஷனில் குத்தாட்டம் போட்ட சுஜிபாலா

திருமணம், திருமண மறுப்பு, பிரிந்தவருடன் சேர்ந்து மீண்டும் நடிப்பு என பிரச்னைகளில் சுற்றி வந்த சுஜிபாலா. இப்போது முழு நேர குத்தாட்ட நடிகையாகிவிட்டார். மகேந்திரன், மனிஷாஜித் நடிக்கும் விந்தை என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

அதுவும் போலீஸ் நிலையத்திற்குள். கதைப்படி மகேந்திரனும், மனிஷா ஜித்தும் காதலுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கே இருப்பார்கள். அப்போது பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு வருகிறார் சுஜிபாலா உள்ளிட்ட சில பெண்கள்.

அவர்களை எச்சரிக்கை செய்யும் இன்ஸ்பெக்டர் மகாநதி சங்கர். இனிமே தொழில் செய்யக்கூடாது என்று எச்சரித்து வந்ததுக்கு ஒரு ஆட்டத்தை போடுங்க என்பார். உடனே சுஜிபாலாவும், அவருடன் வந்த பெண்களும் குத்தாட்டத்தை போட்டுவிட்டுச் செல்வார்களாம்.

பாடல் காட்சி சென்சாருக்கு தப்பி வருமா என்று தெரியவில்லை. சுஜிபாலா கையில் இப்போது 5 படங்கள் இருக்கிறதாம். அதில் இரண்டில் கேரக்டர் ரோலில் நடிக்கிறார். மூன்றில் குத்தாட்டம் போடுகிறார்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions