மகேஷ் பாபு படத்தில் நடிகை சுகன்யா

Bookmark and Share

மகேஷ் பாபு படத்தில் நடிகை சுகன்யா

தனது நடன திறமையால் திரைப்பட துறைக்குள் நுழைந்த நடிகை சுகன்யா நடிகையாக மட்டுமல்லாது பாடகி, இசையமைப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்துள்ளார். தமிழில், உலக நாயகன் நடிகர் கமலஹாசன் முதல் நடிகர் பிரபுதேவா என பல முன்னணி நடிகர்களுடன் சுகன்யா நடித்துள்ளார்.

தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடிகை சுகன்யா தனது முத்திரையை பதித்துள்ளார். விவாகரத்திற்கு பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் நடிகை சுகன்யா தற்போது குணசித்திர நடிகையாக மாறிவிட்டார்.

தெலுங்கு திரையில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கும் ஸ்ரீமந்துடு என்ற படத்தில் சுகன்யா நடிக்க உள்ளார். தெலுங்கு திரையில் மிர்ச்சி எனும் வெற்றி படம் இயக்கிய  கோரடல சிவா இயக்கி வரும் இப்படத்தில் நடிகை சுகன்யா மகஷ்பாபுவின் குடும்ப நண்பராக நடிப்பதாக கூறப்படுகின்றது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions