சுகன்யாவுக்காக அடக்கி வாசித்த மஞ்சுவாரியர்..!

Bookmark and Share

சுகன்யாவுக்காக அடக்கி வாசித்த மஞ்சுவாரியர்..!

படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை.. முடிந்ததும் தெரியவில்லை என்பது போல மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் 'என்னும் எப்பொழும்' படத்தை வெற்றிகரமாக முடித்து இன்று ரிலீஸாகும் விதமாக தியேட்டர்களுக்கு அனுப்பிவைத்துவிட்ட ஆசுவாசத்தில் இருக்கிறார் படத்தின் இயக்குனரான சத்யன் அந்திக்காடு.

படம் பற்றி சமீபத்தில் பேசிய இயக்குனர் 'மஞ்சு வாரியர் இஸ் தி பெஸ்ட்' என குறிப்பிட்டுள்ளார்.  “மஞ்சு வாரியர் நடிக்க வந்த புதிதில் இயக்குனர் சொல்வதை செய்துவிட்டு போகும் கிளிப்பிள்ளையாகத்தான் இருந்தார்.

ஆனால் போகப்போக நடிப்பில் ராட்சசியாக மாறிவிட்டார். 15 வருடங்களுக்கு முன் 'தூவல் கொட்டாராம்' படத்தை இயக்கியபோது அதில் நடித்த சுகன்யா, ஒரு பாடல் காட்சியில் இவர் அளவுக்கு மேட்ச் செய்யமுடியாமல் தடுமாறியபோது, அவருக்காக மஞ்சுவாரியரை அண்டர்பிளே செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்” என சுகன்யாவுக்காக மஞ்சு வாரியர் அடக்கி வாசித்த கதையை நினைவு கூர்ந்திருக்கிறார் சத்யன் அந்திக்காடு.

அதுமட்டுமல்ல, நடனத்தில் ஷோபனாவுக்கு அடுத்த இடம் மஞ்சு வாரியருக்குத்தான் என்றும் கூறியுள்ளார் அவர். மஞ்சு வாரியர் திருமணம் செய்து நடிப்பு, நாட்டியம் இவற்றை விட்டு ஒதுங்கிய பின்னர் நீண்ட நாட்கள் கழித்து இரண்டாவது முறையாக அரங்கேற்றம் செய்தபோது, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவரை உற்சாகப்படுத்தியவர் தான் சத்யன் அந்திக்காடு.

திலீப்பின் விருப்பத்திற்கு மாறாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தான், கணவன் மனைவி இருவருக்குமான கருத்து வேறுபாட்டை துவக்கி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.  


Post your comment





Related News
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!
நடிகை மஞ்சுவாரியர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து!
சைபர் கிரைமில் புகார் அளித்த மஞ்சு வாரியார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions